மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
7 minutes ago
துமகூரு: துமகூரில், 16 வயது மாணவி ஆண் குழந்தை பெற்றெடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணமான மாணவியின், 35 வயது உறவினர், 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹுலியூர்துர்கா பகுதியை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு கடந்த மாதம், 18ம் தேதி, வயிற்று வலி ஏற்பட்டது. மாணவியை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தார். அவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அத்துடன் அவர் ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். ஏழு மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக டாக்டர்கள் கூறினர். இதைக்கேட்ட பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹுலியூர்துர்கா போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார், 'போக்சோ' சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மாணவியின் உடல் சீரானதும், அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், மாணவி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக உறவினர் மல்லேஸ், 35, மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் இறங்கினர். இதையறிந்த மல்லேஸ் தலைமறைவானார். பத்து நாட்களுக்கும் மேல் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. ஊரின் புறநகர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், மல்லேஸ் வசமாக சிக்கினார். அவரை நேற்று போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
7 minutes ago