மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
7 minutes ago
சிக்கமகளூரு: அய்யப்ப மாலை அணிந்திருந்த மாணவர்களை, கல்லுாரியில் இருந்து வெளியேற்றியதால், ஹிந்து அமைப்பினர் அதிருப்தி அடைந்தனர். சிக்கமகளூரு நகரில் எம்.இ.எஸ்., - பி.யு.சி., கல்லுாரி உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு பி.யு.சி., படிக்கும் மூன்று மாணவர்கள், சபரிமலைக்கு செல்ல அய்யப்பன் மாலை அணிந்திருந்தனர். நேற்று காலை கழுத்தில் அய்யப்பன் மாலையுடன் வகுப்புக்கு வந்தனர். இதைப்பார்த்து கோபம் அடைந்த கல்லுாரி முதல்வர், 'வகுப்பில் இருந்த மூன்று மாணவர்களையும் வெளியேற்றினார். மாலையை கழற்றி விட்டு வாருங்கள்' என, கண்டிப்பாக உத்தரவிட்டார். இதுகுறித்த தகவலறிந்த ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் கல்லுாரிக்கு வந்து கேள்வி எழுப்பினார். அப்போது கல்லுாரி முதல்வர், 'கல்லுாரிக்குள் மாணவர்கள் சீருடையை தவிர, வேறு எதற்கும் அனுமதியில்லை. எனவே, மாலையை கழற்றும்படி கூறினேன்' என, விளக்கம் அளித்தார். அதை ஏற்காத ஹிந்து அமைப்பினர், 'வேறு மதத்தினர் அவர்களின் மதச்சின்னத்தை அணிந்து வந்தால், இதேபோன்று வெளியேற்றுவீர்களா? மாணவர்கள் கல்லுாரி சீருடையில் தான் வந்துள்ளனர். அதன்மீது கருப்பு வஸ்திரம் அணிந்துள்ளனர். இது, உடை கட்டுப்பாடு மீறலாகுமா. நீங்கள் ஹிந்துக்களை குறி வைத்து இது போன்று செய்கிறீர்கள்' என, ஆவேசமாக பேசினர். இதுபோன்று செய்தால், நுாற்றுக்கணக்கான மாணவர்களுக்கு, அய்யப்ப மாலை அணிவிப்போம் என்றும் எச்சரித்தனர். இதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது. தகவலறிந்து போலீசார் அங்கு வந்தனர். அதன்பின், அய்யப்ப மாலையுடன் வந்த மாணவர்கள் வகுப்பில் அமர, கல்லுாரி முதல்வர் அனுமதி அளித்தார்.
7 minutes ago