மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
14 minutes ago
தங்கவயல்: தங்கவயல் வக்கீல்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப் பட்டுள்ளது. 12 பதவிகளுக்கு 25 பேர் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கவயலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய வக்கீல்கள் சங்கத் தேர்தல், பல்வேறு காரணங்களால் நான்கு ஆண்டுகளை கடந்து இம்மாதம் 14ம் தேதி நடக்கிறது. 146 வக்கீல்கள் ஓட்டளித்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். தேர்தலில் தலைவர் பதவிக்கு குருசாலா சீனிவாசா, எஸ்.என்.ராஜகோபால் கவுடா; துணைத் தலைவர் பதவிக்கு எம்.மகேந்திரன், கே.சி.நாகராஜ்; பொதுச் செயலர் பதவிக்கு ஆர்.ஜோதிபாசு, பி.மணிவண்ணன்; இணைச் செயலர் பதவிக்கு ஆர்.ஜெகநாதன், என்.மனோகரன்; பொருளாளர் பதவிக்கு - பெண்களுக்கு ஒதுக்கீடு - பி.ஹர்ஷிதா, கே.பிரீத்தி, சரஸ்வதி; செயற்குழு உறுப்பினர்கள் 7 பேர் தேர்வுக்கு எம்.அசோகன், குமாரி பானு, கே.தினேஷ் குமார், கே.கண்ணன், பி.சி.பரமேஷ், கே.எஸ்.ராஜசேகர், என்.சிவசங்கரா, சி.சிவப்பா, எஸ்.கே.சீனிவாசலு, தங்கராஜ், விஜய் ராமகிருஷ்ணா, சி.வினோத்குமார், விஜயஸ்ரீ, கே.வி.வினோத்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர். அன்று காலை 8:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை ஓட்டுப் பதிவு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப் படுகிறது. தேர்தல் அதிகாரியாக, பங்கார்பேட்டை வக்கீல் ராஜகோபால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
14 minutes ago