உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்நாடக பள்ளிகளில் 3வது மொழியாக தமிழ்; சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உறுதி

 கர்நாடக பள்ளிகளில் 3வது மொழியாக தமிழ்; சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உறுதி

கன்னட கலையரங்கம் நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது: கர்நாடகாவில் உள்ள பள் ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கு மூன்றாவது மொழியாக தமிழ் சேர்க்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உறுதி அளித்தார். பெங்களூரின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு இன்றியமையாதது. விதான் சவுதா கட்டியதிலும் தமிழர்களுக்கு பங்கு உண்டு. அந்த காலத்தில் கட்டுமான பணிக்கு தமிழகத்தில் இருந்து பலர் வந்தனர். வியாபாரம், கூலி என பல விதமான தொழில்களை செய்வதற்கும் வந்தனர். அனைத்து மொழி பேசுபவர்கள் வாழும் நகரம் பெங்களூரு. இங்கு, அனைத்து மொழிகளையும் கேட்க முடியும். இதுபோன்ற, பன்மொழி கொண்ட நகரம் இந்தியாவிலே வேறு எங்கும் இல்லை. தமிழ் மொழி 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. சிறுவர் - சிறுமியர் மொபைல் போன் உபயோகத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதுவே, அவர்களின் மூளை, உடல் வளர்ச்சிக்கு நல்லது. தமிழில் காமராஜர், ஈ.வெ.ரா., ராஜாஜி போன்ற பல தலைவர்கள் கொடி கட்டி பறந்தனர். பெங்களூரில் தமிழ், தெலுங்கு, உருது பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர். கர்நாடகாவில் தமிழை மூன்றாவது மொழியாக தேர்வு செய்து படிப்பது குறித்து கல்வி அமைச்சரிடம் கோரிக்கை வைப்பேன். இது நியாயமான கோரிக்கை. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'தமிழ் வாசிப்பை மறக்காதீர்'

பாராட்டரங்கம், சிந்தனைக்களம் நிகழ்ச்சி ஒன்றாக நடந்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு தமிழக மாநில தகவல் ஆணையர் நடேசன் தலைமை வகித்து பே சுகையில், ''தமிழ் புத்தக திருவிழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. தமிழ் வாசிப்பை யாரும் மறக்கக்கூடாது. கர்நாடக தமிழர்கள் அனைவரும் சாதி, மத பேதம் கடந்து ஒண்றிணைய வேண்டும். தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும்,'' என்றார். தமிழக மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி 'அறி ந்தும் அறியாமலும்' எனும் தலைப்பில் சிந்தனை உரையாற்றி பேசுகையில், ''பிற மாநிலத்தில் தமிழ் புத்தக திருவிழா நடத்துவது சிறப்பு. ஒவ்வொரு செய்தியிலும் நாம் அறியாத பல விஷயங்கள் உண்டு. பேப்பர், பேனா என்பது சக்தி வாய்ந்த ஆயுதம். இதை அனைவரும் பயன்படுத்த வேண்டும்,'' என்றார். தமிழக மாநில தகவல் ஆணையர்கள் நடேசன், இளம்பரிதி, இந்தியப் பேனாநண்பர் பேரவை நிறுவன தலைவர் கருண், லெமுரியா அறக்கட்டளை நிறுவன தலைவர் குமணராசன், சென்னை பிரசாந்தி முதியோர் நல்வாழ்வு இல்ல நிறுவனர் ராஜகோபால பாலாஜி, பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், காந்தி நகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை