உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரன்யா தாயார் ஆட்கொணர்வு மனு மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

ரன்யா தாயார் ஆட்கொணர்வு மனு மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பெங்களூரு : தங்கம் கடத்திய வழக்கில் சிறையில் உள்ள நடிகை ரன்யாராவ் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பாக, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யாராவ் சிறையில் உள்ளார். இது தொடர்பாக அவரது தாயார் ரோகினி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நேற்று நீதிபதிகள் சந்தேஷ், ராமசந்திர ஹுட்டர் முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் வக்கீல் சந்திரசேகர் வாதிட்டதாவது:தங்கம் கடத்திய வழக்கில் சிறையில் உள்ள ரன்யாராவ் மீது அந்நிய செலாவணி தடுப்பு சட்டத்தின் கீழ், ஏப்., 22ம் தேதி கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு மறுநாள் அவர் கைது செய்யப்பட்டார்.இந்நேரத்தில், அவர் தரப்பு விளக்கத்தை கேட்க கூட அதிகாரிகள் அவகாசம் அளிக்கவில்லை.இது அரசியலமைப்பு பிரிவு 22ன் கீழ் விதிமீறலாகும். அவர் மீது பிறப்பித்த வாரன்ட் சட்ட விரோதமானது. அவரை கைது செய்யும் போது, சரியான நடைமுறை கடைபிடிக்கவில்லை. எனவே, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் சாந்தி பூஷன், ''ரன்யாராவை கைது செய்த போது அனைத்து விதிமுறைகளும் சட்டப்படி பின்பற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக எழுத்து பூர்வமாக ஆட்சேபனை தாக்கல் செய்யப்படும். எனவே, ஒரு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'வழக்கு விசாரணையை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !