உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நந்திமலை, ஸ்கந்த மலையில் சிறுத்தைகள் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

 நந்திமலை, ஸ்கந்த மலையில் சிறுத்தைகள் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

சிக்கபல்லாபூர்: நந்திமலை, ஸ்கந்த மலையில் சில நாட்களாக, சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சுற்றுலா பயணியர், டிரெக்கிங் வருவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மைசூரு, சிக்கமகளூரை தொடர்ந்து, சிக்கபல்லாபூரின் நந்திமலை, ஸ்கந்த மலை போன்ற சுற்றுலா தலங்களிலும் சிறுத்தை தொந்தர வு அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் வயலுக்கு செல்லவும் அஞ்சுகின்றனர். சிறுத்தைகளை பார்த்தால் அஞ்ச வேண்டாம். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தாருங்கள். சிக்கபல்லாபூ ர் நகரிலும், புறநகரிலும் சிறுத்தைகள் காணப்படுகின்றன. இவைகள் கிராமங்களின் பசுக்கள், நாய்களை வேட்டையாடுகின்றன. சிக்கபல்லாபூர், நந்திமலை, ஸ்கந்தமலை உட்பட மலைகள், குன்றுகள் சூழ்ந்துள்ள மாவட்டமாகும். இங்கு வன விலங்குகள் தென்படுவது அபூர்வம். ஆனால் திப்பேனஹள்ளி கிராமத்தின் கற்பாறை மீது, சிறுத்தைகள் நடமாட்டத்தை மக்கள் பார்த்துள்ளனர். பல நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை உள்ளன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பகுதியில் காணப்படுகின்றன. முத்தேனஹள்ளியின் வி.டி.யு., கல்லுாரி வளாகம், சத்யசாய் ஆசிரமம் என, பல இடங்களில் சிறுத்தைகள் நடமாடுகின்றன. நந்திமலை, ஸ்கந்தமலைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். மலையேறவும் அதிகமானோர் வருகின்றனர். இப்பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதால் சுற்றுலா பயணியர், டிரெக்கிங் செல்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தனித்து செல்வதை தவிர்க்கவும். சிறுத்தைகள் தென்பட்டால், கூச்சலிடவோ, போட்டோ, வீடியோ எடுக்கவோ கூடாது. இது அவற்றை கோபப்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை