உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  போலீசார் அறிவித்த தள்ளுபடி சலுகை 8.71 கோடி ரூபாய் அபராதம் வசூல்

 போலீசார் அறிவித்த தள்ளுபடி சலுகை 8.71 கோடி ரூபாய் அபராதம் வசூல்

கர்நாடகாவில் போக் குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடியை பலரும் பயன்படுத்தி கொண்டனர். கடந்த 11 நாட்களில் மட்டும் 8.71 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. கர்நாடகாவில் சாலைப் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அபராதம் செலுத்தாமல், லட்சக்கணக்கான வாகன உரிமையாளர்கள், அலட்சியம் காண்பித்தனர். இதை வசூலிக்க முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறினர். பாக்கி வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. எனவே கடந்தாண்டு, போக்குவரத்து போலீசார், மாநில அரசிடம் அனுமதி பெற்று, போக்குவரத்து விதிமீறலுக்கு செலுத்தும் அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி சலுகை அளித்தனர். வாகன உரிமையாளர்கள், தாமாக முன் வந்து அபராதம் செலுத்தினர். போக்குவரத்து போலீஸ் துறையில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் வசூலானது. மீண்டும் தள்ளுபடி சலுகை அளிக்கும்படி, மாநில அரசிடம் போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். அரசும் அனுமதி அளித்துள்ளது. இதன்படி நவம்பர் 21 முதல் டிசம்பர் 12 வரை 50 சதவீதம் தள்ளுபடி சலுகையுடன், அபராதம் செலுத்த அனுமதி அளித்தது. வாகன உரிமையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்தி, அபராதம் செலுத்தி வருகின்றனர். இவ்வகையில், நேற்றுடன் 11 நாட்கள் முடிவடைந்தன. இதுவரை 3.07 லட்சம் வழக்குகள் தீர்க்கப்பட்டன. இதிலிருந்து 8.71 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் 64.29 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர் - நமது நிருபர் -:.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ