மேலும் செய்திகள்
தங்கவயல் வக்கீல்கள் சங்கத்துக்கு 14ல் தேர்தல்
1 minutes ago
தெரு நாய்கள் கணக்கெடுப்பு: தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
3 minutes ago
கோடி மடாதிபதியை சந்தித்த அமைச்சர் பரமேஸ்வர்
3 minutes ago
பெங்களூரு: ''திறமையான நிர்வாகியாக இருந்த முன்னாள் முத ல்வர் கெங்கல் ஹனுமந்தையாவின் கொள்கைகளின் பாதையில் அரசு இயங்கும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். முன்னாள் முதல்வர் கெங்கல் ஹனுமந்தையா பிறந்த நாளை ஒட்டி, பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு, முதல்வர் சித்தராமையா நேற்று மாலை அ ணிவித்தார். பின், அவர் அளித்த பேட்டி: கெங்கல் ஹனுமந்தையா ஒரு திறமையான நிர்வாகியாகவும், கர்நாடகாவின் இரண்டாவது முதல்வராகவும் இருந்தார். சுதந்திரத்திற்குப் பின் எழுந்த பிரச்னைகளை முதல்வராக அவர் திறம்பட எதிர்கொண்டார். விதான் சவுதாவை கட்டுவதற்கான சிற்பியாக இருந்தபோதும், இக்கட்டடம் திறக்கும் போது, அவர் முதல்வராக இல்லை. மக்களின் பிரதிநிதியாக மக்களுக்கு சேவை செய்வது மிகவும் முக்கியம். மேலும் விதான் சவுதா கட்டடத்தின் கிழக்கு பகுதியில், 'மக்களின் பணி கடவுளின் பணி' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவரின் கொள்கைகளின் பாதையை பின்பற்ற எங்கள் அரசு முயற்சி மேற்கொள்ளுங்கள். நே ஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது, பா.ஜ.,வின் அரசியல் பழிவாங்கும் செயலாகும். இவ்வாறு அவர் கூறினார். கெங்கல் ஹனுமந்தையா படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்திய முதல்வர் சித்தராமையா.
1 minutes ago
3 minutes ago
3 minutes ago