உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு: பேக்கரிகளுக்கு நோட்டீஸ்

ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு: பேக்கரிகளுக்கு நோட்டீஸ்

புதுடில்லி:குறைந்த ஜி.எஸ்.டி., தொகையை செலுத்தி, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக, கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட பேக்கரி, சாக்லேட் நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.மும்பை, அகமதாபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரக அலுவலகங்கள், விளக்கம் கேட்டு பல முன்னணி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017, ஜூலை முதல், 2023 மார்ச் வரையிலான காலத்தில், உணவகங்களுக்கு விதிக்கப்படும் ஐந்து சதவீத ஜி.எஸ்.டி., தொகையை பேக்கரி, சாக்லேட் நிறுவனங்கள் செலுத்தி உள்ளன. ஆனால், பேக்கரி, சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களை, உணவகங்களாக வகைப்படுத்த முடியாது. இந்த நிறுவனங்கள், அனைத்தும் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருபவை. குறைந்த வரி பிரிவில் ஜி.எஸ்.டி., செலுத்தியதால் வட்டி, அபராதத் தொகை நீங்கலாகவே, இந்நிறுவனங்களின் வரி நிலுவை 1,000 கோடியை தாண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.இதே போன்று, கடந்த முறை ஐஸ்கிரீம் பார்லர்கள், 18 சதவீத ஜி.எஸ்.டி., தொகைக்கு மாறாக, ஹோட்டல்களுக்கான ஐந்து சதவீத வரி செலுத்தியதாகக் கூறி, நிலுவையை செலுத்த வேண்டுமென ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை