நான்கரை ஆண்டில் 2,800 சதவிகிதம் உயர்வு
மும்பை:நிதி தொழில்நுட்ப நிறுவனமான என்.பி.எஸ்.டி.,யின் பங்கு, தேசிய பங்கு சந்தையின் 'எமர்ஜிங்' பங்குகள் தளத்தில் இருந்து, பிரதான பங்குகளின் தளத்திற்கு மாறும் வகையில் உயர்ந்திருக்கிறது. என்.எஸ்.இ.,யின் எமர்ஜிங் தளத்தில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டன. 80 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட என்.பி.எஸ்.டி., பங்கின் விலை தற்போது 2,800 மடங்கு அதிகரித்து, 2,341 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.இந்நிறுவனம் யு.பி.ஐ., பரிமாற்றம், மின்னணு வங்கி சேவை கட்டமைப்பு, கண்காணிப்பு தொழில்நுட்பம், மின்னணு பரிமாற்ற தொழில்நுட்ப சேவை ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டுள்ளது.