உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  கபே விதிமுறைகளுக்கு மாருதி சுசூகி தலைவர் எதிர்ப்பு

 கபே விதிமுறைகளுக்கு மாருதி சுசூகி தலைவர் எதிர்ப்பு

புதுடில்லி பயணியர் கார்களுக்கான 'கபே' எனப்படும் கார்ப்பரேட் எரிவாயு கட்டுப்பாடு விதிமுறைகள் இந்தியாவுக்கு ஏற்றதில்லை, இது ஐரோப்பிய கார்களுக்கான விதிமுறைகள் என மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி., பார்கவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'கபே' விதிமுறைகள் இருக்கவே கூடாது என்பது என் சொந்த கருத்து. இது, ஐரோப்பிய சந்தையில் உள்ள பெரிய மற்றும் எடை அதிகம் உள்ள கார்களுக்காக ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகள்; இந்திய சந்தைக்கு ஏற்றதல்ல. விதிமுறைகள் என்பது பொதுவாக இருக்க வேண்டுமே தவிர, ஒருதலைபட்சமாக இருக்கக் கூடாது. தற்போது உள்ள 'கபே 3' விதிமுறைகள் பெரிய கார்களுக்கு ஆதரவாகவும், சிறிய கார்களுக்கு எதிராகவும் உள்ளது. இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தலின் பெயரில், சிறிய கார்களுக்கு ஆதரவாக சில மாற்றங்களை செய்து, கடந்த செப்டம்பரில் 'கபே 3' விதிமுறை வரைவை ஆற்றல் திறன் பணியகம் வெளியிட்டது. சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டாலும், சரியான திசையில் அவை வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை