உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  பாமாயில் இறக்குமதி 47 சதவீதமாக குறைந்தது

 பாமாயில் இறக்குமதி 47 சதவீதமாக குறைந்தது

புதுடில்லி: நாட்டின் பாமாயில் இறக்குமதி 56 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த 2024 - 25 சந்தைப்படுத்தல் ஆண்டில் மாற்றமின்றி, 1.63 கோடி டன்னாகவே இருந்ததாக, எஸ்.இ.ஏ., எனும் இந்திய எண்ணெய் பிரித்தெடுக்கும் சங்கம் தெரிவித்துள்ளது. முந்தைய 2023 - 24ம் ஆண்டிலும் இறக்குமதி இதே அளவிலேயே இருந்தது. கடந்த சந்தைப்படுத்தல் ஆண்டில் பாமாயில் இறக்குமதி 75.80 லட்சம் டன்னாகவும்; சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 54.70 டன்னாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு ஆண்டின் நவம்பர் மாதம் முதல், அடுத்தாண்டின் அக்டோபர் மாதம் வரை சந்தைப்படுத்தல் ஆண்டாக கணக்கிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை