உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புருனே, சிங்கப்பூர் பயணம் நிறைவு: நாடு திரும்பினார் மோடி

புருனே, சிங்கப்பூர் பயணம் நிறைவு: நாடு திரும்பினார் மோடி

புதுடில்லி: புருனே , சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள் பயணம் நிறைவடைந்ததையடுத்து இரவு நாடு திரும்பினார் பிரதமர் மோடி.ஆசியாவின் சிறிய நாடான புருனேவுடனான தூதரக உறவு, 40 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், முதல் இந்தியப் பிரதமராக, நரேந்திர மோடி அங்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டின் சுல்தான் ஹசனல் போல்கியாவுடன், இரு தரப்பு உறவுகள், சர்வதேச பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.பின் அங்கிருந்து மற்றொரு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு சென்றடைந்தார். இது, பிரதமராக அவருடைய ஐந்தாவது பயணம். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அவரை வரவேற்று, தனிப்பட்ட முறையில் விருந்தும் அளித்தார்.இதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, திருவள்ளுவர் பெயரில், முதல் சர்வதேச கலாசார மையம் சிங்கப்பூரில் துவக்கப்பட உள்ளது இதை மிக விரைவில் அமைக்க உள்ளதாக, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இரு நாடுகள் வெற்றி பயணம் நிறைவடைந்த நிலையில் இரவு டில்லி திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
செப் 06, 2024 11:35

நல்ல கருத்துக்களை பதிவு செய்தால் நமக்கு நாமே திட்டம்தான் , ஆனால் இன்றைக்கு நடிப்பு. போலி, நாடகம் , ஏமாற்றுதல் , சமூகத்துக்கு எதிராக செயல்படுதல் இவைகளே அதிக வரவேற்ப்படுகிறது , இவர் அங்கு சென்றார் சைக்கிள் ஒட்டியிருந்தால் வந்தே மாதரம்


Kasimani Baskaran
செப் 06, 2024 05:26

திராவிட நியூஸ் சேணலில் மோடி ப்ருனை வந்ததோ, சிங்கப்பூர் வந்ததோ வரவேயில்லை. ஆனால் சைக்கிள் ஓட்டியது மற்றும் ஒப்பந்தம் என்று செய்த கோமாளித்தனங்களை பத்து நிமிடம் காட்டினார்கள். சில நேரங்களில் தன்னாட்சிப்பகுதியாக தமிழகத்தை மத்திய அரசு அறிவித்து விட்டாதோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.


Narayanan Muthu
செப் 06, 2024 09:06

புருனே மன்னருடன் புருடா மன்னர்


முக்கிய வீடியோ