உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சபரிமலையில் குவியும் குப்பையில் 40 சதவீதம் தடை பாலிதீன்

 சபரிமலையில் குவியும் குப்பையில் 40 சதவீதம் தடை பாலிதீன்

சபரிமலை: பிளாஸ்டிக், பாலிதீன் தடை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சபரிமலையில் குவியும் குப்பையில் 40 சதவீதம் பாலிதீன் கழிவுகள் இருப்பதால் தேவசம்போர்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சபரிமலை வரும் அனைத்து பாதைகளிலும் பிளாஸ்டிக் தடை தொடர்பான அறிவிப்பு பலகைகள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகிறது. ஆனாலும் சபரிமலையில் பாலிதீன் குப்பைகள் குறைந்தபாடில்லை. பக்தர்கள் விட்டுச் செல்லும் பாலிதீன் குப்பைகளை வனவிலங்குகள் தின்று அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை வனத்துறையும் விளக்கிக் கொண்டிருக்கிறது. நடப்பு மண்டல கால சீசன் துவங்கி 19 நாட்கள் கடந்த நிலையில் சன்னிதானத்தில் டிராக்டர்களில் 798 லோடு குப்பை சேகரிக்கப்பட்டது. தினமும் 40 முதல் 42 லோடு குப்பைகள் சன்னிதானத்தில் குவிகிறது. இதில் 40 சதவீதம் பாலிதீன் கழிவுகளாக உள்ளது. தேவசம்போர்டின் பவித்திரம் சபரிமலை என்ற திட்டத்தில் தன்னார்வ தொண்டர்களும் தேவசம்போர்டு ஊழியர்களும் இணைந்து தினமும் காலையில் ஒரு மணி நேரம் குப்பைகளை சேகரிக்கின்றனர். இவை பாண்டித்தாவளத்தில் உள்ள இன்சினேட்டரில் எரிக்கப்படுகிறது. இங்கு ஒரு மணி நேரத்தில் எழுநூறு கிலோ குப்பைகள் எரிக்கப்படுகிறது. 22 மணி நேரம் தொடர்ச்சியாக இன்சினேட்டர் எரிகிறது. பாலிதீன் குப்பைகளும் இங்கு எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதையடுத்து சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் பாலிதீன் பைகளை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என தேசவம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ