உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்

ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமேதி : இந்திய ஆயுதப்படைகளுக்கு கலாஷ்நிகோவ் வகையின் அதிநவீன ஏகே 203 ரைபிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த ரைபிள்கள் மூலம் ஒரு நிமிடத்தில் 700 சுற்றுகள் சுட முடிவதுடன், 800 மீ., தூரம் வரை தோட்டாக்கள் பாயும். இந்தியா ரஷ்யா ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஐஆர்ஆர்பிஎல்வ) கூட்டு தயாரிப்பில், உ.பி., அமேதி இந்த ரைபிள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ரைபிளுக்கு ஏகே -203 'ஷெர்' என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ரூ.5,200 கோடி மதிப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , 6 லட்சம் ரைபிள்களை ஆயுதப்படைக்கு வழங்க உள்ளன. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் தலைவர் மேஜனர் ஜெனரல் எஸ்கே ஷர்மா கூறியதாவது: இந்த விநியோகம் 2030ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். இதுவரை 48 ஆயிரம் ரைபிள்கள் வழங்கப்பட்டு உள்ளன. அடுத்த 2 அல்லது 3 வாரத்தில் 7 ஆயிரம் ரைபிள்களும், இந்தாண்டு டிச.,க்குள் 15 ஆயிரம் ரைபிள்களும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.பாகிஸ்தான், சீனா எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு இந்த ரைபிள்கள் பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

nisar ahmad
ஜூலை 19, 2025 12:18

முதலில் துப்பாக்கி வெடிக்குதான்னு பருங்க.


R. SUKUMAR CHEZHIAN
ஜூலை 18, 2025 17:33

திராவிட மாடல் ஆட்சி நடக்கின்ற தமிழகத்தில் Defence Corridor ஆழ்ந்து தூக்கிக் கொண்டு இருக்கிறது.


Thravisham
ஜூலை 18, 2025 17:56

அது மட்டுமல்ல செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் வேகமாக வேறு மாநிலங்களுக்கு நகர்ந்து விட்டன. திருட்டு த்ரவிஷன்களுக்கு தேவை வெறும் சாராய ஆலைகள். சோற்றாலடித்த மக்களுக்கு தேவை 200 மற்றும் 500 மட்டுமே


venugopal s
ஜூலை 18, 2025 19:07

இந்த ஆர்டினன்ஸ் தொழிற்சாலை எல்லாம் காங்கிரஸ் ஆட்சியின் போது உ.பி.,யில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் என்பது தெரியாதா?


vns
ஜூலை 18, 2025 23:33

ஆயுதங்களை இறக்குமதி செய்து அதன் மூலம் ஆயிரம் கோடிகளை லஞ்சமாக பெற்றுக்கொண்ட காங்கிரஸ் உதாரணம் போபோர்ஸ் ஊழல் கட்சி உத்திர பிரதேசத்தில் ஆர்டினன்ஸ் பாக்டரி அமைத்தது என்பது அறியாமையின் வெளிப்பாடு.


Thravisham
ஜூலை 18, 2025 16:47

மோடியவர்களே நீங்கதான் உண்மையான மகாத்மா. சுபாஷ் சந்திர போஸின் உண்மையான வாரிசு. படுபாவிங்க அவரை சைபீரியா பனிப் பிரதேசத்தில் போட்டுத் தள்ளிட்டானுங்க


V RAMASWAMY
ஜூலை 18, 2025 19:30

உரக்கச்சொல்லுங்கள், செவிடான மந்தமான வாக்காளர்களுக்கு கேட்கட்டும்.


Rajan A
ஜூலை 18, 2025 16:45

மேஜர் ஜெனரல்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை