உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆமதாபாத்-லண்டன் கேட்விக் விமான சேவை தற்காலிக நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு

ஆமதாபாத்-லண்டன் கேட்விக் விமான சேவை தற்காலிக நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு

புதுடில்லி: ஆமதாபாத்-லண்டன் கேட்விக் விமான சேவையை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில விநாடிகளில் நிகழ்ந்த விபத்தை அடுத்து ஏர் இந்தியா விமான பயணங்கள் மீதான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுந்தன.இந் நிலையில், ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ள ஏர் இந்தியா நிர்வாகம், கேட்விக் விமான நிலையத்துக்கு பதில் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.இது தற்காலிகமானது, வாரம் 3 நாட்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் விமான சேவை இருக்கும் என்றும் ஏர் இந்தியா கூறி உள்ளது. வழக்கமாக இந்த வழித்தடத்தில் 5 விமான சேவைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

morlot
ஜூலை 16, 2025 14:23

But air india wont start direct flights from london to chennai or paris to chennai or Francfort to chennai. Only to gujarathis and pynjabis


pmsamy
ஜூலை 16, 2025 09:41

தற்காலிக நிறுத்தம் இல்லை என்றாலும் அதில் பயணிக்க யாரும் வர மாட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை