உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற ஏஐ தொழில்நுட்பம் உதவும்; விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா நம்பிக்கை

வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற ஏஐ தொழில்நுட்பம் உதவும்; விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற நமது கனவை அடைய ஏஐ தொழில்நுட்பம் உதவும் என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்துள்ளார்.டில்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ தொழில்நுட்பம்) தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா பேசியதாவது: ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள ஒரு கருவியாகும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற நமது கனவை அடைய ஏஐ தொழில்நுட்பம் உதவும். நமது இளைய தலைமுறை இந்தக் கனவை நிறைவேற்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டால், 2047ம் ஆண்டுக்கு முன்பே நாம் இந்த இலக்கை அடைவோம். இவ்வாறு அவர் பேசினார்.டில்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது: பிரதமர் மோடி எப்போதும் நாட்டிற்குள் உயர்மட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறார். மத்திய அரசு ஏஐ தொழில்நுட்பத்தை கற்பிக்க முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMESH KUMAR R V
டிச 07, 2025 16:32

ஏ ஐ தொழில்நுட்பட்டால் நன்மையையும் தீமையையும் விளைவிக்க முடியும். புரிந்து செயல்பட்டால் கோடி நன்மை.


Yasararafath
டிச 07, 2025 12:15

இது ஏற்றுக்கொள்ளக்கூடாது.


Balasubramanian
டிச 07, 2025 10:44

இந்தியா வளர்ச்சி அடைகிறது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதி வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகின்றன! இதை மனதில் நிறுத்தி இந்தியன் என இறுமாப்பு கொள்ள வேண்டும் இளைஞர்கள்! நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஒத்துழைத்து உண்மையாக உழைக்க வேண்டும்! அந்நிய நாட்டு மோகத்தை தவிர்க்க வேண்டும்! வளமான பாரதம் இன்னும் இருபத்து ஆண்டுகளில் சாத்தியமே!


Premanathan S
டிச 07, 2025 10:40

எந்த AI யம் நாடு முன்னேற உதவாது. உண்மையான உழைப்பு, நேர்மையான ஆட்சி, ஊழலில்லாத அதிகார வர்க்கம், நல்ல பழக்கமுள்ள மக்கள் தான் முன்னேற்றத்தை கொண்டு வர முடியும் வெறும் நம்பிக்கை வேலைக்கு ஆகாது சார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை