உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சியாச்சின் எல்லையில் ராணுவ வீரர் வீர மரணம்; அஞ்சலி செலுத்திய தலைமை தளபதி

சியாச்சின் எல்லையில் ராணுவ வீரர் வீர மரணம்; அஞ்சலி செலுத்திய தலைமை தளபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சியாச்சின் எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடலுக்கு, தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, இறுதி மரியாதை செலுத்தினார். உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையில் உள்ளது குமார் படை முகாம்.ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் சியாச்சின் பனிமலையில், வீரர்கள் சுவாசிப்பதற்கு கூட பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இத்தகைய சூழலில், எதிரி நாட்டுப் படையினர், பயங்கரவாதிகளில் நடமாட்டத்தை அங்கே நமது வீரர்கள் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு பணியமர்த்தப்பட்ட சுபேதார் பல்தேவ் சிங், தாய்நாட்டு பணியில் உயிர்நீத்ததாக ராணுவம் அறிவித்துள்ளது. எத்தகைய சூழ்நிலையில் அவர் உயிரிழந்தார் என்பது அறிவிக்கப்படவில்லை.அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி டில்லி ராணுவ முகாமில் நடந்தது..நிகழ்வில் பங்கேற்ற ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அதை தொடர்ந்து அவர் கூறுகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 2002ம் ஆண்டு ஆபரேஷன் ரக்ஷக் நடவடிக்கையின் போது சுபேதார் பல்தேவ் சிங் 18வது பட்டாலியனில் சேர்க்கப்பட்டார். துணிச்சலான இந்த வீரர், தனது தியாகம், திறமை மற்றும் தலைமைத் திறன்களுக்காக நினைவு கூரப்பட்டார்.நாயக் சுபேதார் பால்தேவ் சிங், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீரத்துடன் பணியாற்றிய வீரர்.இவ்வாறு அவர் கூறினார்.18வது பட்டாலியனில் பணியாற்றிய ஜெனரல் திவேதி, பல்தேவ் சிங்கின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார்.இவரது தியாகம் எதிர்கால சிப்பாய்களுக்கு ஊக்கமளிக்கும். நமது வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Varadarajan Nagarajan
ஏப் 21, 2025 20:42

பாரத் மாதாக்கி ஜெய். நமது ராணுவம் பலமடங்கு நவீனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் நமது வீரர்களின் உயிர்த்தியாகம் நிகழ்வது மிகவும் மனவேதனையளிக்கின்றது.


Durai Kuppusami
ஏப் 21, 2025 20:34

தியாகமே நீ மரணிக்க வில்லை நம் புண்ணிய பாரத பூமியில் எங்கோ இருந்து........... இதற்கு மேல் வரவில்லை...


Ramesh Sargam
ஏப் 21, 2025 19:42

நாட்டிற்காக உயிரை விடும் இந்த ராணுவவீரர்களை பார்த்தாவது நமது ராகுல் காந்தி, ஸ்டாலின், உதயநிதி, மமதா போன்ற அரசியல்வாதிகள் தினமும் அவர்கள் தியாகங்களை பற்றி ஒருமுறை சிந்தித்தால், மனம்மாறி ஊழல் செய்வதை விட்டு நாட்டுக்காக பணிபுரிவார்களா? சந்தேகம்தான். உயிரிழந்த ராணுவ வீரரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 20:25

கடுமையான குளிரில் உயிர் இழந்தார் ...அங்கே சண்டை நடக்கவில்லை


சமீபத்திய செய்தி