உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் 10வது முறை முதல்வரான ஒரே நபர்; உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் நிதிஷ்

இந்தியாவில் 10வது முறை முதல்வரான ஒரே நபர்; உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் நிதிஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற சாதனையை பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பெற்றுள்ளார். இந்த சாதனையை லண்டன் வேர்ல்ட் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.அண்மையில் நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூ.ட்டணி அமோக வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h3eayuzt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில் அரசியலில் ஈடு இணையற்ற பங்களிப்பை அளித்ததற்காக லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தால் நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ்குமார் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா வெளியிட்டு உள்ளார்.இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; 10வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் அடைந்த அசாதாரண மைல் கல்லை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் (World book of Records) அங்கீகரித்துள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இது இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் உண்மையிலேயே அரிய சாதனை.இந்த குறிப்பிடத்தக்க சாதனை அவரது அசைக்க முடியாத பொது சேவை, நிலையான நிர்வாகம் மற்றும் பீஹார் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். பத்து முறை ஒரு மாநிலத்தை வழிநடத்துவது என்பது வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; இது பீஹாருக்கு ஒரு வரலாற்று தருணமாகவும் அதன் ஜனநாயக வலிமைக்கு ஒரு சான்றாகவும் நிற்கிறது.பீஹாருக்கு ஒரு பெருமையான தருணம். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் நிலையான அர்ப்பணிப்புள்ள தலைவரை போற்றுவோம்.இவ்வாறு சஞ்சய் குமார் ஜா கூறி உள்ளார்.அதிக நாட்கள் முதல்வராக பதவி வகித்தவர்கள் பட்டியலில், நிதிஷ் குமார் எட்டாவது இடத்தில் இருக்கிறார். அவர், அவர் 19 ஆண்டுகளை கடந்து முதல்வராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

chandran
டிச 07, 2025 20:37

இதற்கு முன்னாடி 45 வருஷம் ஆட்சி நடத்தினாரா? இப்போ 46-வது வருஷம் ஆட்சி பண்ணுகிறாரா? 45 வருடம் ஆட்சி பண்ணி இருந்தால் அது சாதனை. இங்கே தாவி, அங்கே தாவி, 1 வருடம், 2 வருடம் என்று திரும்ப திரும்ப பதவி ஏற்பது சாதனை இல்லை.


Bandaranayakan Kumaratungan
டிச 07, 2025 19:37

கை சுத்தம் இருக்கணும். அது இருக்குல்ல


N Sasikumar Yadhav
டிச 07, 2025 19:35

மூன்று முறை குஜராத் முதல்வர் மூன்றாவது முறை பிரதமர் ஊழலற்ற உண்மையான ஆட்சி கொடுக்கிற உத்தமர் நம்ம மோடிஜி


Appan
டிச 07, 2025 19:32

இதனால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை. பிகார் இன்னமும் அதே நிலையில் தான் உள்ளது.


RAMESH KUMAR R V
டிச 07, 2025 19:24

பீகார் மக்கள் அவரை இன்றும் ஆதரிக்கின்றனர். எளிமையானவர். பாராட்டுக்கள்.


Sangi Mangi
டிச 07, 2025 18:38

அதிக நாட்கள் முதல்வராக பதவி வகித்தவர்கள் பட்டியலில், நிதிஷ் குமார் எட்டாவது இடத்தில் இருக்கிறார். அவர், அவர் 19 ஆண்டுகளை கடந்து முதல்வராக பதவி வகிப்பது என்றால் நான்கு முறை தானே முதல்வராக இருந்து ருக்க முடியும்??? 5வருடங்களுக்கு ஒரு முறை என்றால் 4 தடவைதான்?? அது எப்படி 10தடவை,,, ராஜினமா பண்ணி பண்ணி விளையாடியதால் வந்த பலனோ ..


முருகன்
டிச 07, 2025 18:14

இங்கே இருந்து அங்கே அங்கே இருந்து மீண்டும் இங்கே என் நமது நாட்டில் அரசியல் விளையாட்டு நடக்கும் வரை இவர் உலக மக சாதனை புரிவார்


Ramanujam Veraswamy
டிச 07, 2025 18:13

It is not an achievement to be proud of. It is possible only due changing parties/alliances and clinching to CM seat. Shame.


Rameshmoorthy
டிச 07, 2025 18:02

I do not see any pride in it as he was jumping jack but his hands are corrupt free


Tiruchendurai Balasubramanian
டிச 07, 2025 21:32

அவர் அசெம்பிலி தேர்தல் மூலம் வந்தவர் இல்லையாமே . MLC லெஜிஸ்டடிவ் கவுன்சில் மூலம் வந்தவராம், கட்சியின் தலைவர் , ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை