உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார்கே கூட்டத்தில் காலி இருக்கைகள்: காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஸ்பெண்ட்

கார்கே கூட்டத்தில் காலி இருக்கைகள்: காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கலந்து கொண்ட கட்சி கூட்டத்தில் காலியான இருக்கைகள் அதிகம் இருந்ததால் அதிருப்தி அடைந்த கட்சி தலைமை மாவட்ட தலைவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.காந்தி, அம்பேத்கரை நினைவு கூரும் வகையில் பேரணிகள், கூட்டங்களை காங்கிரஸ் நடத்தி வருகிறது. பீகாரில் பக்சர் மாவட்டத்தில் தல்சாகார் மைதானத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூட்டத்தில் உரையாற்றும்போது அங்கு போடப்பட்டிருந்த பெரும்பாலான இருக்கைகளில் யாருமே இல்லை. ஆட்கள் இன்றி இருக்கைகள் மட்டுமே இருந்துள்ளது.அதிக மக்கள் வருவார்கள் என்ற அடிப்படையில் ஏராளமான இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. ஆனால் கூட்டம் கூடவில்லை. இதனால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைய, அதன் விளைவாக பக்சர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோஜ்குமார் பாண்டேவை சஸ்பெண்ட் செய்துள்ளது. கட்சியின் அனைத்துவித பதவிகளில் இருந்தும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து பீகார் காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ராஜேஷ் ரத்தோட் கூறியதாவது; தல்சாகார் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் போதிய அளவு கூட்டம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லாமையே இதற்கு காரணம் என்பது தெரிய வருகிறது. எனவே, பக்சர் மாவட்ட தலைவர் மனோஜ்குமார் பாண்டே கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராமகிருஷ்ணன்
ஏப் 22, 2025 09:32

கட்சியே காலியாகி விட்டது. கூட்டத்தில் காலி சேர் இல்லாமல், வேற எப்படி இருக்கும். ராவுலு வந்தால் தான் கூலிக்கு ஆள் பிடித்து வருவார்கள். கார்கே க்கு தேவையில்லை


பிரேம்ஜி
ஏப் 22, 2025 08:30

இவர் பேச்சு சரியில்லை என்று தான் கூட்டம் சேரவில்லை! தவறை தன் மீது வைத்து கொண்டு அடுத்தவர்கள் மேல் குற்றம் சாட்டுவது காங்கிரஸ் கல்ச்சர்! அடுத்த கூட்டம் யாருமே ஏற்பாடு செய்யவே தயங்குவார்கள்! இனி இவரே ஏற்பாடு செய்து, இவரே பேசி, இவரே கைதட்டிக்கொள்ள வேண்டியதுதான்!


பேசும் தமிழன்
ஏப் 22, 2025 07:45

நாட்டில் கான்கிரஸ் கட்சி செத்து போய் ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. மக்களின் நம்பிக்கையை பெறாத மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பப்பு கான் போன்ற ஆட்களை தான் முதலில் நீக்க வேண்டும். எப்போதும் தேச விரோத கும்பலுக்கு ஆதரவான பேச்சு. பிறகு எப்படி மக்களிடம் நம்பிக்கை வரும்?


Balasubramanian
ஏப் 22, 2025 04:41

பாருங்கள் கூட்டம் வரவில்லை என்றால் தொண்டர்கள் மீது பழி! ஓட்டு விழவில்லை என்றால் தேர்தல் கமிஷன் மீது பழி!! கூட்டணி அமைய வில்லை என்றால் அந்த கட்சி மீது பழி! இன்னும் இந்த காயலாங்கடை காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி தேவையா?


Kasimani Baskaran
ஏப் 22, 2025 04:04

கட்சியை கலைத்து விடலாம். கன்னட செல்வப்பெருந்தொகை என்று கூட இவனை சொல்லலாம். பிடிக்காதவர்கள் மீது திராவிடம் வீசவில்லை என்ற ஒரே ஒரு வேறுபாடுதான்..


Shankar
ஏப் 21, 2025 23:38

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு. நாடு முழுவதிலும் காங்கிரஸ் கூடாரம் காலியாகிக்கொண்டுள்ளது என்பது நாடறிந்த விஷயமாச்சே. இது காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தெரியாதா என்ன?


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 23:37

மார்கெட்டு போன போஜ்புரி நடிகைகளின் நடன நிகழ்ச்சியும் இணைத்து நடத்தியிருக்கலாம்


Saai Sundharamurthy AVK
ஏப் 21, 2025 22:51

மக்கள் கூட்டம் வரவில்லையென்றால் தொண்டர்களை பலிகடாவாக்குவது தான் காங்கிரஸ் தலைவர்களின் வேலை போலிருக்கிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் மக்கள் காங்கிரஸ்ஸை ஒதுக்கி சுத்தமாக மறந்து விட்டார்கள் என்று.


Nandakumar Naidu.
ஏப் 21, 2025 22:46

இவர் போடுகிற அர்த்தமில்லாத தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத காட்டு கூச்சலுக்கு எவன் வருவான்?


சமீபத்திய செய்தி