உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 14 கோடி உறுப்பினர்களுடன் பா.ஜ., மிகப்பெரிய கட்சி: பாஜ தேசிய தலைவர் நட்டா

14 கோடி உறுப்பினர்களுடன் பா.ஜ., மிகப்பெரிய கட்சி: பாஜ தேசிய தலைவர் நட்டா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விசாகப்பட்டினம்: ''மொத்தம் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ., விளங்குகிறது,'' என, மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தேசிய தலைவருமான நட்டா தெரிவித்துள்ளார். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா பேசியதாவது: மொத்தம் 14 கோடி உறுப்பினர்களை கொண்டு, உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பா.ஜ., விளங்குகிறது. நம் நாட்டில், 20 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், 13 மாநிலங்களில் பா.ஜ., அரசும் உள்ளன. பா.ஜ., தான் நாட்டின் மிகப்பெரிய பிரதிநிதித்துவ கட்சியாக உள்ளது. பா.ஜ.,வுக்கு லோக்சபாவில் 240 எம்.பி.,க்கள் உள்ளனர். கட்சியில் 1,500 எம்.எல்.ஏ.,க்களும், 170க்கும் மேற்பட்ட எம்.எல்.சி., எனப்படும் மேல்சபை உறுப்பினர்களும் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 11 ஆண்டுகளில் செயல்திறன் மற்றும் பொறுப்புள்ள அரசு அமைந்துள்ளது. மக்களுக்கு பதிலளிக்கும் அரசாகவும் உள்ளது. மத்தியில் ஆட்சியில் இருந்த முந்தைய அரசு, வளர்ச்சிப் பணிகள் எதையும் செய்யவில்லை. ஏற்கனவே, ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் மறந்துவிட்டனர். குடும்ப அடிப்படையிலான அரசியல், ஊழல் மற்றும் கட்சியில் உள்ளவர்களை திருப்திபடுத்தும் செயல்கள்தான் இருந்தன. இவ்வாறு அவர் பேசினார். ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்ட நட்டா, தலைநகர் அமராவதியின் கட்டுமானத்திற்காக மத்திய அரசு 15,000 கோடி ரூபாயை வழங்கியுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Tamilan
செப் 15, 2025 22:25

பெரிய கண்டுபிடிப்பா? மிரட்டல்களுக்கெல்லாம் யாரும் அஞ்சமாட்டார்கள்


Tamilan
செப் 15, 2025 11:30

14 கோடி வாக்காளர்கள் கூட கிடையாது . எங்கிருந்து உறுப்பினர்கள் வந்தார்கள் ? காங்கிரஸ்தான் உலகிலேயே மிகப்பெரிய கட்சி


SUBBU,MADURAI
செப் 15, 2025 15:02

2 crore active members, 240 MPs, 1500 MLAs and govts in 20 states, led by PM Modi.


Tamilan
செப் 15, 2025 22:21

0 வில் இரண்டில் என இருந்தபோது காங்கிரஸ்தான் உலகிலேயே மிகப்பெரிய கட்சி என்று இவர்கள் தலையில் உதிக்காதது ஏன் ?.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 15, 2025 10:43

உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனால் கசப்பு என்றைக்கும் நல்ல நோய் நிவாரணி.


nisar ahmad
செப் 15, 2025 10:12

அதில் பத்து கோடி போலி உறுப்பினர்கள் கள்ள ஓட்டு கோவிந்தன்.


Oviya Vijay
செப் 15, 2025 10:09

என்ன பிரயோஜனம்... தமிழகத்துல என்னைக்குமே பாஜக ஒரு துக்கடா கட்சி தான்...


Oviya Vijay
செப் 15, 2025 09:24

இந்த 14 கோடி சங்கிகளில் தமிழகத்தில் உள்ள 267 சங்கிகள் மட்டுமே அடக்கம்... மிச்சம் எல்லாம். மற்ற மாநிலங்களின் கணக்குகள்... தமிழகம் என்பது என்றைக்கும் சங்கிகளின் சங்கைக் கடித்துத் துப்பும் மாநிலம் தானேயன்றி, பதவி அதிகாரம் கொடுத்து அவர்களுக்கு தமிழகத்தில் கால் பதிக்க ஒருநாளும் இடம் கொடார்...


Tamilselvan,Kangeyam638701
செப் 15, 2025 10:57

தமிழகம் இப்போது விழித்துக் கொண்டது உன்னைப் போன்று அப்பத்துக்கு மதம் மாறிய மிஷனரி கைக்கூலிகளான ... நார் நாரக கிழித்து தொங்க விடும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.


Mario
செப் 15, 2025 09:19

கள்ள வோட்டு லிஸ்டும் சேர்த்து


Mani . V
செப் 15, 2025 05:12

130 கோடியில் 14 கோடி உறுப்பினர்கள்தானா? வெறும் 11 சதவிகிதம்.


Vasan
செப் 15, 2025 06:16

He says party members count itself as 14 crore, which is a big number. Voters count will be still high.


Kasimani Baskaran
செப் 15, 2025 04:05

அதாவது தீமஃகாவை விட 14 மடங்கு பெரிய கட்சி. ஆனால் தீம்க்காவை ஒழித்துக்கட்ட அப்படி ஒரு பயம். தேசவிரோத தீம்க்காவை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்.


சமீபத்திய செய்தி