உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கூடுதலாக 30 மொழிகளில் திருக்குறள்: மத்திய செம்மொழி நிறுவனம் அறிவிப்பு

 கூடுதலாக 30 மொழிகளில் திருக்குறள்: மத்திய செம்மொழி நிறுவனம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: திருக்குறளை மேலும் 30 மொழிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், மத்திய செம்மொழி தமிழ் நிறுவனம் புதிய மொழிபெயர்ப்பு முயற்சியைத் துவங்கியுள்ளது. இது குறித்து மத்திய செம்மொழி தமிழ் நிறுவன இயக்குநர் சந்திரசேகரன் கூறியதாவது: தமிழின் தொன்மையான நுாலான திருக்குறள், ஏற்கனவே 34 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

பேசும் மொழி

அதில், 25 இந்திய மொழிகளிலும், ஒன்பது உலக மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. வரும் 2026 பொங்கலுக்குள், மேலும் 30 புதிய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணி முடியும். இதில், 23 இந்திய மொழிகள், ஏழு உலக மொழிகள் அடங்கும். உலகம் முழுதும் தமிழ் பார ம்பரியத்தை பரப்பும் இலக்குடன், அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் திருக்குறளை, 100 மொழிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. நம் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தமிழ், ஹிந்தி, கன்னடம் என, 22 மொழிகள் உள்ளன. ஆனால், அட்டவணையில் இல்லாத பல மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. உதாரணமாக, நீலகிரி மாவட்டத்தின் இருளர் இன மக்கள் பேசும் மொழியிலும் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளோம். வரவிருக்கும் திட்டங்களில், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு மொழிகளுக்கும் குறள் மொழிபெயர்ப்பு துவங்கப்பட உள்ளது.

மொழிபெயர்ப்பு

சமீபத்தில் நான்காவது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொல்காப்பியம் மொழிபெயர்ப்பு நுால்களை வெளியிட்டார். இந்நுால் ஒடியா, அசாமி, உருது, துளு உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V Venkatachalam, Chennai-87
டிச 08, 2025 08:33

மத்திய அரசு தானே இதை செய்ய போறாங்க. ஏதோ டமில் நாட்டில செம்மொழின்னு உருட்டுறான்களே அவனுங்க தான் எலக்ஸனுக்காக இதை செய்ய துணஞ்சிடானுங்கன்னு நினச்சிட்டேன்.ஆனானப்பட்ட தமிழ் பல்கலை கழகத்தையே மற்ற எந்த மாநிலத்திலும் இது வரை இவங்களால கட்ட முடியல. ஆனா கட்டாத அதுக்கு மத்திய அரசு பணம் தரலன்னு உருட்டுவானுங்க. அதுக்கு தொட்டுகிறதுக்கு ஸமஸ்கிருதத்துக்கு 2500 கோடி குடுக்கிறாங்கன்னும் உருட்டுவானுங்க. கேடு கெட்டவனுங்க.


Vasan
டிச 08, 2025 07:14

இதற்கு, திருவள்ளுவரிடம் காப்புரிமை அனுமதி பெற வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும்.


R. SUKUMAR CHEZHIAN
டிச 08, 2025 07:00

இத்தனை வருஷம் தமிழை வைத்து பிழைப்பை ஓட்டிய இந்த திராவிட கும்பல்கள் என்ன கழட்டினாங்க என தெரியவில்லை. இதில் தேசியவாத கட்சி பாஜகவை பற்றி பொய் பிரச்சாரம் வேறு அவங்க தான் தமிழையும் தமிழின் தொன்மை பெருமையையும் போற்றி போற இடம் எல்லாம் பரப்புறாங்க.


Kasimani Baskaran
டிச 08, 2025 06:59

தமிழை மத்திய அரசு எடுத்துக்கொண்டால் தீமக்காவுக்கு ஜன்னியே வந்துவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை