உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடது கண்ணுக்கு பதிலாக சிறுவனுக்கு வலது கண்ணில் ஆப்பரேஷன் செய்ததாக புகார்

இடது கண்ணுக்கு பதிலாக சிறுவனுக்கு வலது கண்ணில் ஆப்பரேஷன் செய்ததாக புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நொய்டா: நொய்டாவில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, இடது கண்ணில் உள்ள பிரச்னைக்கு, மருத்துவர் தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் நிதின். இவரின், 7 வயது மகன் யுதிஷ்திர் என்பவருக்கு இடது கண்ணில் நீர் கசிந்தபடி இருந்தது. இதனால், நொய்டாவில் உள்ள ஆனந்த் ஸ்பெக்ட்ரம் என்ற தனியார் மருத்துவமனையில், சிறுவனை கடந்த 12ம் தேதி அனுமதித்தனர்.சிறுவனின் கண்களை பரிசோதித்த மருத்துவர் ஆனந்த் வர்மா, இடது கண்ணில் பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை உதவியுடன் அகற்ற முடியும் என்றும் கூறி உள்ளார். இதையடுத்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்காக 45,000 ரூபாய் கட்டணம் பெற்றுள்ளனர்.சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்த பின் தான், இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருப்பதை தாய் கவனித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அதற்கு பதிலளிக்காத மருத்துவமனை நிர்வாகம், பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரிடம் மோசமாக நடந்து கொண்டு உள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் போலீசிலும், தலைமை மருத்துவ அதிகாரியிடமும் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

வைகுண்டேஸ்வரன்
நவ 15, 2024 10:30

அடடா, இது உத்தரபிரதேசத்தில் ஆச்சே திராவிடிய ஆட்சி, விடியா ஆட்சி என்றெல்லாம் எழுத முடியாது. டாக்டரைத் திட்டுவோமா, இல்ல, நர்ஸ் ஸைத் திட்டலாமா?


Barakat Ali
நவ 15, 2024 11:31

நடந்தது அரசு மருத்துவமனையில் அல்ல... தனியார் மருத்துவமனையில்... தனியார் மருத்துவமனையில் மாநில அரசின் பங்கென்ன என்று கூட சிந்திக்க முடியாத அளவுக்கு அறிவு முதிர்ச்சி ... .


Nallavan
நவ 15, 2024 10:21

ஒவொரு முறையும், குழந்தை மருத்துவர்கள் பெற்றோரிடம் நோயாளியின் பெயர் மற்றும் ஆதார் எண்களையும், நோய் பாதிக்கப்பட்ட இடத்தையும் மறுஉரித்து செய்துகொள்ள வேண்டும்


BALOU
நவ 15, 2024 10:18

இந்த டாக்டரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்


rajan
நவ 15, 2024 10:58

நடந்த மாநிலம் உபி. ஆகவே அந்த டாக்டருக்கு நோபல் பரிசு கொடுக்க யோகி மோடி சிபாரிசு


S Ramkumar
நவ 15, 2024 09:48

ஏம்பா இது ஒரு தனி மனிதனின் தவறுக்கு எப்படி அரசாங்கம் பொறுப்பாக முடியும். அரசாங்கம் விசாரித்து குற்றம் நிரூபணம் ஆனால் தண்டனை தரலாம். இப்ப தமிழ் நாட்டில் ஒரு அரசாங்க மருத்துவமனையில் கூட ஒரு டாக்டரை கத்தியால் ஒரு நபர் குத்தி விட்டார். அதற்காக யாரை குறை சொல்லுவது.


Duruvesan
நவ 15, 2024 06:28

உபியில் ஆட்சி பல் இளிக்கிறது


Senthoora
நவ 15, 2024 06:26

வேறு என்ன, டாக்டருக்கு பணம் வந்த சந்தோஷத்தில், தலை, கால்புரியாத சந்தோசம். கத்தியை மாற்றி வைத்துவிட்டார்கள்.


J.V. Iyer
நவ 15, 2024 05:04

ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு அமெரிக்காவில் இப்படித்தானே நடந்தது. இதனால் ஸ்ரீதேவி நிறைய பணம் கறந்துவிட்டார்கள்.


அப்பாவி
நவ 15, 2024 05:02

நீட் எழுதி பாஸ் பண்ணுன டாக்டராக்கும்.


சந்திரசேகர்
நவ 15, 2024 07:34

இல்லை இட ஒதுக்கீடு டாக்டர்


Kasimani Baskaran
நவ 15, 2024 04:50

இது போன்ற பொறுப்பற்ற மருத்துவர்களை வாழ்நாள் முழுவதும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கக்கூடாது. கூடுதலாக இழப்பீடும் வாங்கிக்கொடுக்க வேண்டும்.


Senthoora
நவ 15, 2024 06:27

சான்ஸே இல்லைங்க, பணம் விளையாடும்.


முக்கிய வீடியோ