உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் அழிகிறது; பாகிஸ்தான் அழுகிறது: பிரதமர் மோடி விமர்சனம்

காங்கிரஸ் அழிகிறது; பாகிஸ்தான் அழுகிறது: பிரதமர் மோடி விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ''பலவீனமடைந்துவரும் காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுகிறது. பாக்., தலைவர்கள் காங்கிரசுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், அவர்கள் ராகுலை பிரதமராக்க துடிக்கின்றனர்'' என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: குஜராத்தில் நான் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த தேர்தலில் ஆனந்த் மற்றும் கெடா மாவட்ட மக்கள் எல்லா சாதனைகளையும் முறியடிப்பார்கள். 2014ல் என்னை நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினீர்கள். குஜராத்தில் பணிபுரியும் போது, ​​குஜராத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சிக்கு என்று ஒரு மந்திரம் இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d29u7le9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

என் கனவு

நாட்டிற்கு என்ன நடந்தாலும் குஜராத் முன்னேற வேண்டும் என்று நாங்கள் சொன்னதில்லை. எனக்கு ஒரே ஒரு கனவு இருக்கிறது, 2047ல் நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​இந்தியா 'வளர்ச்சியடைந்த பாரதம்' ஆக இருக்க வேண்டும் என்பதே எனது கனவு. இன்றைக்கு காங்கிரஸ் இந்தியாவில் பலவீனமடைந்து வருகிறது.

பாகிஸ்தான்

இதில் வேடிக்கை என்னவென்றால், இங்கு காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுகிறது. இப்போது பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இளவரசரை (ராகுலை) பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது. பாகிஸ்தானின் ரசிகராக காங்கிரஸ் இருப்பது நமக்கு முன்பே தெரியும். பாகிஸ்தானுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான இந்த கூட்டு இப்போது முற்றிலும் அம்பலமாகியுள்ளது.

இண்டியா கூட்டணி

இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தங்களின் வியூகத்தை நாட்டின் முன் அம்பலப்படுத்தியுள்ளார். அவர் முஸ்லிம்களை ஜிகாத்துக்காக ஓட்டளிக்குமாறு சொல்கிறார். அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுக்கூடி ஓட்டளிக்க வேண்டும் என்றும் இண்டியா கூட்டணி சொல்கிறது. ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் அவமதித்து விட்டது. ஒரு பக்கம் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மற்றும் பொதுப்பிரிவினரிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். மறுபக்கம் ஜிகாத்துக்காக ஓட்டளியுங்கள் எனக் கூறுகின்றனர். இது அவர்களின் நோக்கம் எவ்வளவு ஆபத்து என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பேசும் தமிழன்
மே 02, 2024 20:38

அவர்கள் பங்காளி கட்சி அழிந்தால்.... அவர்களுக்கு கஷ்டமாக இருக்கத்தானே செய்யும்.... கான் கிராஸ் கட்சி ஆட்சியில் இருந்தால் பாகிஸ்தான்... அவர்கள் இஷ்டப்படி விளையாடலாம் ....நினைத்த இடத்தில் குண்டு வெடிப்பு நடத்தலாம் ....இப்போது பிஜேபி ஆட்சி நடப்பதால் ...பாகிஸ்தான் நாட்டால் நினைத்தபடி செய்ய முடியவில்லை ....அந்த கோபம் தான் இப்படி வெளிப்பட்டு இருக்கிறது.


மகாதேவ்
மே 02, 2024 19:04

ஒருத்தன் வீழ்ந்தால்தான் இன்னொருத்தன் வாழ முடியும்.


அசோகன்
மே 02, 2024 17:11

காங்கிரஸ் க்கு மட்டும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கள் ஒரே வருடத்தில் பாகிஸ்தானை முன்னேற்றி இந்தியாவை நாடாக மாற்றி காட்டுகிறோம்...........


Kanagaraj M
மே 02, 2024 17:03

ஜெய் ஸ்ரீ ராம்


Syed ghouse basha
மே 02, 2024 14:20

உங்க வாயிலே நல்ல வார்த்தைகளே வராதா?


GMM
மே 02, 2024 14:11

பலவீன காங்கிரஸ் பலம் பெற கொள்கை மாறுபட்ட புள்ளி கூட்டணி, எல்லையற்ற இலவசம் மற்றும் இஸ்லாமிய இட ஒதுக்கீடு சில நூறாண்டுகள் நம்மை ஆக்கிரமித்து அடிமை படுத்தி வாழ்ந்தவர்கள் கிருத்துவ, இஸ்லாம் சமூகம் டெல்லி, பம்பாய், சென்னை, பெங்களூர் போன்ற இந்திய பெருநகர்களில் பெரும் நில பகுதி இவர்களிடம் தான் உள்ளது இங்கு ஒரு சதுர அடி நில விலை ஒரு குக்கிராம விலைக்கு சமம் சுதந்திரம் பெற்ற பின்பும் காங்கிரஸ் செய்த கொடுங்கோல்? பாகிஸ்தான் பிரிவினைக்கு முழு காரணம் நேரு, காந்தி காங்கிரஸ் மத இட ஒதுக்கீடு மூலம் மேலும் பிரிவினைக்கு அச்சாரம் ராகுல் தேசபக்தி கொண்ட காங்கிரஸ் கட்சியினர், கட்சிக்கு ஓட்டு போட பல முறை சிந்திக்க வேண்டும் காங்கிரஸ், திமுக கட்சி தலைமை அடியோடு மாற வேண்டும் அல்லது கட்சி முழு தோல்வி அடைய வேண்டும்


Kumaran
மே 02, 2024 13:42

எப்போதும் நாம் யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்


Pandi Muni
மே 02, 2024 13:35

சும்மாவா நம்ம ரூவா அடிக்கிற மெஷின்கள கொல்லைப்புறமா கொடுத்து நோட்டு அடிச்சிக்க சொன்னவனுங்களாச்சே பாகிஸ்தான் ஒப்பாரிதான் வெப்பான்


Sethuraman
மே 02, 2024 13:16

மரம் நடும் பணி செய்ய முயற்சி எடுக்க வேண்டும்?


Palanisamy Sekar
மே 02, 2024 13:10

இங்கே உள்ள இஸ்லாமியர்கள் கூட அப்படித்தான் ராகுலுக்காக தொழுகின்றார்கள் முல்லாக்கள் சொல்கின்ற கட்சிக்கே வாக்களிக்கின்றார்கள் அந்த வாக்களிக்கும் கட்சியானது ஊழலில் திளைத்தாலும் இஸ்லாம் அவர்களுக்கு தவறென்று போதிக்கவில்லை போலும் ஐந்து நேரம் தொழுகின்ற இஸ்லாமியர்கள் எப்படித்தான் இறைவனுக்கே எதிராக மனசாட்சியே இல்லாமல் ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்கின்றார்களோ தெரியவில்லை அப்படி இருக்கும்போது பாகிஸ்தானில் உள்ளவர்கள் ராகுலுக்கு பிரார்த்தனை செய்வதில் தவறாக தெரியவில்லை மோடிஜி இருந்தால் எல்லை மீறமுடியாது எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்பி நாட்டில் குண்டுவைக்க முடியாது தீவிரவாதத்தை பரப்ப முடியாது அதனால் பாகிஸ்தானிகள் ராகுலுக்கு தொழுவத்தில் அதிசயமென்ன ஆச்சர்யமென்ன?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ