உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பார்லி.,க்கு நாய் குட்டியுடன் வந்த காங்., - எம்.பி., ரேணுகா

 பார்லி.,க்கு நாய் குட்டியுடன் வந்த காங்., - எம்.பி., ரேணுகா

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யான ரேணுகா சவுத்ரி, பார்லி.,க்கு நேற்று காரில் வந்தபோது, நாய்க்குட்டி ஒன்றை உடன் அழைத்து வந்தார். பின்னர், அதை காரில் வீட்டிற்கு திருப்பி அனுப்பினார். ரேணுகா சவுத்ரியின் இந்த செயல், பார்லி.,யையும், எம்.பி.,க்களையும் அவமதிப்பதாக பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டினர். இதற்கு பதிலளித்து ரேணுகா சவுத்ரி கூ றியதாவது: இதில் என்ன மரபு பாதிக்கப்பட்டது; தெருநாய்களை கொண்டு வரக்கூடாது என சட்டம் ஏதாவது இருக்கிறதா? பார்லி., வரும் வழியில், விபத்து ஒன்று நடந்த இடத்தில் இந்த நாய்க்குட்டியை பார்த்தேன். அடிபட்டு விடுமோ என்ற அச்சத்தில், அதை மீட்டு என் காருக்குள் வைத்து பார்லி., அழைத்து வந்தேன். பின், அதை வீட்டிற்கும் அனுப்பிவிட்டேன். ஒரு உயிரைக் காப்பாற்ற யாராவது எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா, அதற்கு ஏதாவது தடை இருக்கிறதா? கடிப்பவர்கள் பார்லி.,யின் உள்ளே அமர்ந்து அரசை நடத்துகின்றனர். அதில் எந்த பிரச்னையும் இல்லையா? நான் ஒரு வாயில்லா ஜீவனை அழைத்து வந்தால் மட்டும் அதை விவாதப் பொருளாக்குவதா? தெருநாய்களை நான் தத்தெடுத்து வளர்ப்பதால், சாலையில் இருந்த அந்த நாய்க்குட்டியை அழைத்து வந்தேன். இதை ஒரு பிரச்னை ஆக்குவதா? இவ்வாறு அவர் கூறினார். ரேணுகா சவுத்ரியின் செயல் நாடகம் என, பா.ஜ., - எம்.பி., ஜெகதாம்பிகா பால் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ரேணுகா சவுத்ரி பார்லி.,யையும், அங்குள்ள எம்.பி.,க்களையும் அவமதித்துள்ளார். உரிய ஆவணங்கள் இன்றி யாரையும் பார்லி.,யின் உள்ளே எம்.பி.,க்கள் அழைத்து வர முடியாது. ''இந்த விவகாரத்தில், அவரும், காங்கிரசும் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ