உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ராஜஸ்தான், தெலுங்கானாவில் காங்.,குக்கு ஆறுதல் பரிசு

 ராஜஸ்தான், தெலுங்கானாவில் காங்.,குக்கு ஆறுதல் பரிசு

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகளுடன் ஏழு மாநிலங்களில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் நேற்று அறிவிக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீரின் புத்கம் தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சியின் அகா சையது முன்தாசிரும், நாக்ரோட்டா தொகுதியில் பா.ஜ.,வின் தேவ்யானி ரானாவும் வென்றனர். ராஜஸ்தானின் -அந்தா தொகுதியில் எதிர்க்கட்சியான காங்.,கின் பிரமோத் ஜெயின் பையா வென்றார். ஜார்க்கண்டின் கத்சிலாவில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் சோமேஷ் சந்திர சோரன் வெற்றி; ஒடிசாவின் -நுவாபடாவில் பா.ஜ.,வின் ஜெய் தோலாகியா வெற்றி. தெலுங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் காங்.,கின் நவீன் யாதவ் வெற்றி; பஞ்சாப் தார்ன் தாரன் தொகுதியில் ஆம் ஆத்மியின் ஹர்மீத் சிங் சந்து வெற்றி; மிசோரமின் டம்பா தொகுதியில் மிசோரம் தேசிய முன்னணியின் லால்தாங்லியானா வெற்றி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ