மேலும் செய்திகள்
வனப்பகுதியில் விடப்பட்ட சிவிங்கிபுலி குட்டி உயிரிழப்பு
19 minutes ago
புடினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு ஏன்?
2 hour(s) ago
பஹ்ராம்பூர்: திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஹுமாயூன் கபீர், பதற்றமான சூழலுக்கு மத்தியில், திட்டமிட்டபடி மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்ட நேற்று அடிக்கல் நாட்டினார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஹுமாயூன் கபீர். பதற்றம் உத்தர பிரதேசம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிச., 6ல், மேற்கு வங்கத்தில் புதிதாக பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்ட இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த விவகாரம், அம்மாநில அரசியலில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வகுப்புவாதத்தை கபீர் துாண்டுவதாக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என, மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் எச்சரித்திருந்தார். இதற்கிடையே, கட்சியில் இருந்து கபீர் நீக்கப்பட்டார். இருப்பினும், திட்டமிட்டபடி பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்படும் என அவர் அறிவித்தார். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இம்மாத இறுதியில் புதிய கட்சி துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டங்காவின் ரெஜிநகரில் மசூதி கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதை தடுத்து நிறுத்தக் கோரி, கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'மசூதி கட்டுவதை ரத்து செய்ய உத்தரவிட முடியாது; சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற, மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்' என அறிவித்தது. இந்நிலையில், ரெஜிநகரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வயல்வெளியில் மசூதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. கபீரின் ஆதரவாளர்கள் பலர், காலையில் இருந்தே மசூதி கட்ட செங்கற்களை தங்கள் தலையில் சுமந்தபடி வந்தனர். ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களிலும் செங்கற்கள் எடுத்துவரப்பட்டன. ரூ.70 லட்சம் மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் இருந்து வந்த மதகுருமார்கள், இஸ்லாமியர்களின் புனித நுாலான குர் - ஆன் ஓதி, அடிக்கல் நாட்டு விழாவை துவங்கி வைத்தனர். பின், கபீர் மசூதி கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். முர்ஷிதாபாத் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விருந்தினர்கள், ஆதரவாளர்கள் உட்பட 50,000க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உணவிற்கு மட்டும், 30 லட்சம் ரூபாயும்; மொத்த நிகழ்ச்சிக்கு, 70 லட்ச ரூபாயும் செலவிடப்பட்டதாக ஹுமாயூன் கபீரின் நெருங்கிய உதவியாளர் தெரிவித்தார்.
19 minutes ago
2 hour(s) ago