மேலும் செய்திகள்
பீஹார் சபாநாயகரானார் பா.ஜ.,வின் பிரேம் குமார்
1 hour(s) ago
விலகி செல்லவில்லை!
1 hour(s) ago
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் போது, 2,208 ஓட்டுச்சாவடிகளில் இறந்தவர்கள், போலி வாக்காளர்கள் யாருமின்றி வினியோகிக்கப்பட்ட படிவங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப வந்ததால், அந்த ஓட்டுச்சாவடிகளை தேர்தல் கமிஷன் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஒன்பது மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை நவம்பர் 4ல் தேர்தல் கமிஷன் துவங்கியது. இதற்கான படிவங்கள் வழங்கும் பணிகள் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், காலக்கெடு டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு டிசம்பர் 9ம் தேதியில் இருந்து, 16ம் தேதிக்கும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு அடுத்த ஆண்டு பிப்ரவரி 7க்கு பதில், 14ம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள, 294 சட்டசபை தொகுதிகளில் மொத்தம், 78,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில் படிவம் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 7.65 கோடி படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 7.38 கோடி படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தெற்கு 24 பர்கானாஸ், புருலியா, முர்ஷிதாபாத், ஹவுரா ஆகிய மாவட்டங்களில் மொத்தம், 2,208 ஓட்டுச்சாவடிகளில் படிவங்கள் அனைத்தும் நிரப்பப்பட்ட நிலையில் திரும்பி வந்துள்ளன; அவற்றில் இறந்தவர் பெயர், நகல் வாக்காளர், கண்டுபிடிக்க முடியாத வாக்காளர் என யாரும் இல்லை. இது சந்தேகத்தை கிளப்பியுள்ளதால், இந்த ஓட்டுச்சாவடிகளை தேர்தல் கமிஷன் கண்காணிப்பில் வைத்துள்ளது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் விளக்க அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago