உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புடவைக்கு பணம் கட்டி ஏமாந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

புடவைக்கு பணம் கட்டி ஏமாந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

பெங்களூரு : யு டியூபில் விளம்பரம் பார்த்து புடவையை ஆர்டர் செய்த, கர்நாடகாவைச் சேர்ந்த, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஏமாற்றப்பட்டார். கர்நாடக அரசில், பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவான, 'சகலா மிஷன்' இயக்குநரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான பல்லவி அக்ருதி, 42, கடந்த மாதம் 10ம் தேதி, யு டியூபில் புடவை விற்பனை குறித்த வீடியோ ஒன்றை பார்த்துள்ளார்.அந்த வீடியோவில், மதுரையில் நெய்யப்பட்ட தரமான காட்டன் புடவைகள், குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்பட்டு இருந்தது. வீடியோவில், பல புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அதில், தங்களுக்கு விருப்பமான புடவையின் புகைப்படத்தை, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து, 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பின், யு.பி.ஐ., செயலி வாயிலாக, 850 ரூபாய் செலுத்தவும் என கூறப்பட்டு இருந்தது. இதன்படி, பல்லவி அக்ருதி, 850 ரூபாயை செலுத்தி உள்ளார்.தன் வீட்டின் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்பினார். ஆனால், ஆர்டர் செய்து பல நாட்கள் கடந்தும், புடவை வரவில்லை. இதனால், குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை, பல்லவி உணர்ந்தார். கடந்த 17ம் தேதி பெங்களூரு கிழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், 'பூர்ணிமா கலெக் ஷன்ஸ் என்ற யு டியூப் சேனலில் வந்த வீடியோவை பார்த்து, 850 ரூபாய் செலுத்தி, புடவையை ஆர்டர் செய்தேன். ஆனால், புடவை வரவில்லை. நான் இழந்த தொகை சிறிதுதான். ஆனால், என்னை போன்று பலரும் ஏமாற்றப்பட்டு இருக்கலாம். இதனால், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைத்திருக்கும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இது குறித்து, தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பி.என்.எஸ்., எனும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 318ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

சிட்டுக்குருவி
ஏப் 27, 2025 20:34

அரசோ அல்லது வியாபாரிகள் கூட்டமைப்போ அல்லது இரண்டும்சேர்ந்த கூட்டமைப்போ நம்பிக்கை, நேர்மையாக ஆன்லைன் வர்த்தகத்திற்க்கான ஒரு சங்கத்தினை உருவாக்கவேண்டும் .same as Better Business bureau அந்த சங்கத்தில் பதிவுசெய்தவர்களுக்கு தனித்துவமாக குறியீடு அல்லது பதிவு எண் வழங்கி விளம்பரங்களில் பதிவிட்டு இருக்கவேண்டும் .அப்போதுதான் இதுபோன்ற ஏமாற்றுகளை கலையமுடியும். மக்களும் நம்பிக்கையோடு ஆர்டர் கொடுக்கலாம் .வியாபாரமும் பெருகும்.


பல்லவி
ஏப் 26, 2025 19:32

ஏமாற்றம் தரும் செய்தி தான்


thehindu
ஏப் 25, 2025 16:33

இப்படி வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடிப்பது விஞ்சான வளர்ச்சியின் அங்கம் . தினமும் கோடிக்கணக்கானவர்களிடம் விஞ்சான முறையில் வீடு புகுந்து அலுவலகம் புகுந்து கொள்ளை முயற்சி நடக்கிறது .


thehindu
ஏப் 25, 2025 16:28

IAS தகுதி தேர்வை மாற்றியமைக்கவேண்டும் . விருப்பமான அனைவருக்கும் சுழற்சி முறையில் கலெக்டர் பதவி வழங்கிவிடவேண்டும் . ஒரு மாநிலத்தையோ, நாட்டையோ மாவட்டத்தையோ ஆழ ஒரு படிப்பு தேவையில்லை . அறிவு இருந்தால் போதும் . அந்த காலத்தில் இப்படியா செய்தார்கள் ? நாடு செழிப்புடன் இல்லையா?


ram
ஏப் 25, 2025 12:55

மனநல நோயாளி போல எதோ கருத்து போடுகிறோம் என்று


Krishnamurthy Venkatesan
ஏப் 25, 2025 12:02

இவ்வாறாக வந்த ஒரு மாம்பழ online விற்பனையில் நான் Rs. 600 வரை ஏமாந்தேன்.


अप्पावी
ஏப் 25, 2025 09:49

அடிச்ச பணத்தில் ஜி.எஸ்டி கட்டியிருப்பாங்க. எனவே ஒன்றிய நிதியமைச்சகம் ஒண்ணும் பண்ணாது. ஆன்லைன் வர்த்தகம் 50 லட்சம் கோடியைத் தாண்டியதுன்னு மெடல் குத்தி உடும்.


Padmasridharan
ஏப் 25, 2025 08:09

தானாக கடைக்கு சென்று பொருட்களை, பணம் கொடுத்து வாங்குவது நின்று போகும்போது, எல்லாமே, தான் இருக்கும் இடத்திற்கே வந்துவிடும் என்று வாழும் மக்களுக்கு இப்படிப்பட்ட மோசடிகளும் வீடு தேடித்தான் வந்து சேரும். பெரிய ஆட்களுக்கும் இப்படி நடக்கும்போது மற்றவர்களின் வலியும் தெரியும். தொடரட்டும் வேட்டை


अप्पावी
ஏப் 25, 2025 08:08

இவரோட குறையை யார் தீர்த்து வெப்பாங்க பாவம். ஆளும் பார்க்க வெள்ளந்தியா தெரியறாரு. 850 ரூவாயோட போச்சே. தமிழன் கிட்டே உஷாரா இருக்கணும்.


अप्पावी
ஏப் 25, 2025 08:05

எந்த ஆன்லைன் வியாபாரத்திலும் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்யுங்க. அதுவும் திருட்டு திராவிடர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் ஆன்லைனில் ஆர்டர் செய்யாமலிருப்பதே நல்லது. புகார் குடுத்தா ஏமாத்துனவரை புடிச்சு நோண்டி நொங்கெடுத்து அடிச்ச பணத்தில 40 பர்சண்ட் வாங்கிட்டு உட்ருவாங்க. எது வாங்கினாலும் உள்ளூர் கடையில் காசு குடுத்து வாங்கு தாயி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை