உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவா இரவு விடுதியில் தீ விபத்து : 23 பேர் பலி

கோவா இரவு விடுதியில் தீ விபத்து : 23 பேர் பலி

பனாஜி: வடக்கு கோவாவில் செயல்பட்டு வந்த இரவு விடுதியில் நிகழ்ந்த விபத்தில் 23 பேர் பலியாயினர்.சம்பவம் குறித்து கோவா காவல்துறை தலைவர் அலோக்குமார் கூறியதாவது: வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் குறைந்தது 23 பேர் பலியாயினர். பலியானவர்கள் அனைவரும் விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை இவ்வாறு அவர் கூறினார். மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் எம்.எல்.ஏ., மைக்கேல் லோபோசம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி