உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகிழ்ச்சியான விஷயம்: யுனெஸ்கோ கலாசார அமர்வு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

மகிழ்ச்சியான விஷயம்: யுனெஸ்கோ கலாசார அமர்வு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியக் குழுவின் 20வது அமர்வுடில்லியில் தொடங்கியதில் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.டில்லி செங்கோட்டையில் முதல் முதலாக அரிய பாரம்பரிய கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த யுனெஸ்கோவின் கூட்டம் நேற்று (டிசம்பர் 08) தொடங்கியது. வரும் டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலாசார கூட்டம் குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியக் குழுவின் 20வது அமர்வு கூட்டம் இந்தியாவில் தொடங்கியுள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயம். இந்த கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, நமது வாழ்க்கை மரபுகளை பிரபலப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது, அதுவும் செங்கோட்டையில் சமூகங்களையும் தலைமுறைகளையும் இணைக்க கலாசாரத்தையும், நமது உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை