உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க 10 நாட்கள் காத்திருந்தேன்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க 10 நாட்கள் காத்திருந்தேன்

புதுடில்லி: 'காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள தீய நோக்கங்களை பாரபட்சமற்ற முறையில் ஊடகங்கள் வெளிக்கொண்டு வரும் என, 10 நாட்கள் காத்திருந்தேன்.''யாரும் அதை பற்றி வாய்த்திறக்காத காரணத்தால், வேறு வழியின்றி அதை பற்றி பேசும் நிலைக்கு தள்ளப்பட்டேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மூன்று கோடி வீடு

'நியூஸ் 18' ஊடகத்துக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வாசித்ததும், அதில் முஸ்லிம் லீக் முத்திரை உள்ளது என்பதை உணர்ந்தேன். இதைப் பார்த்து ஊடகங்கள் அதிர்ச்சி அடையும், யாராவது இது குறித்து கருத்து தெரிவிப்பர் என, 10 நாட்கள் காத்திருந்தேன். ஆனால், ஊடகங்கள் அந்த தேர்தல் அறிக்கையில் இருப்பதை அப்படியே வெளியிட்டன. அதில் பொதிந்துள்ள நோக்கங்கள் வெளிவரவில்லை. வேறு வழியின்றி அந்த உண்மைகளை வெளிக்கொண்டு வர நிர்ப்பந்திக்கப்பட்டேன்.ஏழை மக்களுக்காக நான்கு கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டதை என் பிரசாரத்தில் தொடர்ந்து பேசி வருகிறேன். யாருக்கெல்லாம் வீடு கட்டித்தரப்படவில்லை என்ற பட்டியலை அளிக்கும்படி பிரசாரத்திற்கு செல்லும் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.மூன்றாவது முறை ஆட்சி அமைந்ததும், அவர்களுக்காக மேலும் 3 கோடி வீடுகளை கட்டித்தரும் பணிகளை நான் துவங்க வசதியாக இருக்கும்.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 55 கோடி மக்கள் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர். இனி வரும் காலங்களில், 70 வயதுக்கு மேற்பட்ட ஆண் - பெண் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறும் வகையில் திட்டம் விரிவாக்கப்பட உள்ளது.

மருத்துவ காப்பீடு

'ஆஷா' சுகாதாரப்பணியாளர்கள், திருநங்கையருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். எங்கள் ஆட்சியில் 52 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு, மக்களுக்கான நலத்திட்ட தொகைகள் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 36 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. உலகின் எந்த நாட்டிலும் ஓர் ஆண்டில் இத்தனை வங்கிக் கணக்குகள் துவக்கப்படவில்லை. நாங்கள் வளர்ச்சி குறித்து பேசுகிறோம். காங்கிரஸ் பரம்பரை சொத்துகளை கொள்ளையடிப்பது குறித்து பேசுகிறது. எனவே, அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
ஏப் 29, 2024 08:32

ஊடகம், பத்திரிக்கை அரசியல் கருத்து, அறிக்கையை அப்படியே மக்கள் பார்வைக்கு தீர்மானிக்க வெளியிடும் காங்கிரஸ் அறிக்கை இலவசம், சலுகை கொடுத்து, பிறர் உழைப்பை சுரண்டி வெற்றி பெற்ற திட்டமிடும் ஊழல் இல்லாத அரசியல் அவசியம் என்று மக்கள் உணர்ந்து வருகின்றனர் ஒரு சமூக மக்கள் குடும்ப கட்டுப்பாடு, தொழில் தெரியாவிட்டால் வறுமையில் சிக்குவர் இதற்கு அரசு, பிற சமூகம் காரணம் அல்ல மக்களிடம்வெறுப்பை அதிகரித்து, காங்கிரஸ் நாட்டையும், மக்களையும் தொடர்ந்து பிளவு படுத்தி வருகிறது நீதிமன்றம் அரசியல் சாசன அதிகாரம் மூலம் வாக்கு வங்கி இலவச திட்டங்களை முறிக்க வேண்டும்


வழிபோக்கன்
ஏப் 29, 2024 08:13

ஒரே பால் தான். ஒட்டு மொத்த எதிரணி டீமும் அவுட்.


பேசும் தமிழன்
ஏப் 29, 2024 07:29

எங்கள் ஊரிலும் இப்படி தான் ஆர் எஸ் பாரதி ஊடங்களாக இருக்கின்றன ....திருட்டு மாடல் ஆட்சியின் அவலத்தை எந்த ஊடகமும் வெளியே கொண்டு வராது ....அவர்களுக்கு ஒத்து ஊதுவதையே ....கடமையாக கொண்டு இருக்கிறார்கள் .....இதற்கு தினமலர் நாளிதழ் மட்டும் விதிவிலக்கு !!!


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை