உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம்: எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து பியூஷ் கோயல் கருத்து

இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம்: எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து பியூஷ் கோயல் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' இந்தியாவில் திறமைசாலிகளும், புதுமைகளும் அதிகளவில் உருவாகிறது,'' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.எச்1பி விசா கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: ஏராளமான திறமைசாலிகளையும், புதுமைகளையும் இந்தியா உருவாக்குகிறது. இதனால், இந்திய பொறியாளர்கள் மற்றும் பட்டதாரிகள் உலகளவில் புகழ்பெற்று வருகின்றனர். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு தீர்வு வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனங்களின் வளர்ச்சி திட்டங்களை ஊக்கப்படுத்தவும், புதிய ஆராய்ச்சி, மே்மபாடு மற்றும் புதிய யோசனைகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.இந்தியாவின் ஸ்டார்ட் அப் அமைப்பு மிக துடிப்புடன் உள்ளது. ஏராளமான நிறுவனங்கள், தங்களது பாரம்பரியமான வளங்களை தாண்டி புதிய கொள்கைகளில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
செப் 25, 2025 05:58

இங்கே திறமைக்கு ஏத்த வாய்ப்பு இல்லாமத்தானெ அமெரிக்காவுக்கு ஓடினாங்க? அவிங்க அனுப்பின டாலர்களை வாங்கி வெச்சுக்கிட்டீங்களே?


Ramesh Sargam
செப் 25, 2025 02:12

இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம். இது உலகறிந்த உண்மை. ஆனால் அவர்கள் சாதிக்க இந்தியாவில் மேலும் பல வசதிகளை மத்திய, மாநில அரசுகள் எந்த லஞ்சலாவண்யமும் எதிர்பார்க்காமல் செய்துகொடுத்தால், அவர்கள் சொந்த மண்ணிலேயே பணிபுரிந்து அல்லது தொழில் செய்து சாதிப்பார்கள். அதற்கான நடவடிக்கைகளை, திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செய்து தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க இந்தியா. வளர்க நமது திறமைசாலிகள்.


ஆரூர் ரங்
செப் 24, 2025 22:04

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இந்த விசா கிடைப்பது அரிதாகிவிட்டது. இனிமேல் இதனையே முழுக்க நம்பி இருக்ககூடாது என்று நிறுவனங்கள் முடிவு செய்துவிட்டன. அதனால் இது ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பெல்லாம் கிடையாது.


Moorthy
செப் 24, 2025 21:51

சாமர்த்தியசாலிகளும் அதிகம்தான்.


புதிய வீடியோ