உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தோல்வியை தவிர்க்கப் போராடும் வெஸ்ட் இண்டீஸ்… இந்திய அணி அபார பந்துவீச்சு

தோல்வியை தவிர்க்கப் போராடும் வெஸ்ட் இண்டீஸ்… இந்திய அணி அபார பந்துவீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 248 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி, 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் (அக்.,09) தொடங்கியது. இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. கில் 129 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.இதைத் தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. சாய் ஹோப் 31 ரன்னுடனும், டெவின் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.3ம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய பவுலர்களே ஆதிக்கம் செலுத்தினர். இதனால், அந்த அணி 248 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் ஆனது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பும்ரா, சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து, 270 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சந்திரபால் 10 ரன்களுக்கும், அதானஷே 7 ரன்களுக்கும் அவுட்டாகினர். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேம்ப்பெல், சாய் ஹோப் இணை தோல்வியை தவிர்க்க போராடியது. இருவரும் அரைசதம் அடித்தனர். 3ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்திருந்தது.இதன்மூலம், 97 ரன்கள் பின்தங்கியுள்ளது. கேம்ப்பெல் 87 ரன்னுடனும், சாய் ஹோப் 66 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ