உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  நாட்டின் வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வுக்கு ஹிந்துக்களின் வாழ்க்கை முறை காரணமா? பிரதமர் மோடி விமர்சனம்

 நாட்டின் வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வுக்கு ஹிந்துக்களின் வாழ்க்கை முறை காரணமா? பிரதமர் மோடி விமர்சனம்

புதுடில்லி: “நம் நாட்டின் முந்தைய கால வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டதற்கு, ஹிந்துக்களின் வாழ்க்கை முறை காரணம் எனக்கூறி அவதுாறு பரப்பப்பட்டன,” என, பிரதமர் மோடி விமர்சித்தார். டில்லியில், 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழின் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று பேசியதாவது: முந்தைய ஆட்சியா ளர்கள், நம் நாட்டு மக்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் மத்திய அரசு மக்கள் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அரசின் பல சேவைகளைப் பெற, ஒரு நபரின் சுயகையொப்பமே போதுமான ஆதாரமாக கருதப்படுகிறது. இதன்மூலம், குடிமக்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்க செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலவும் காலனித்துவ மனநிலையை நாம் அகற்றுவது அவசியம்; அடுத்த 10 ஆண்டுகளுக்கு குடிமக்களை தொலைநோக்கு பார்வையுடன் முன்னோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறேன். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஈவுத்தொகை வாயிலாக கோரப்படாத நிதியாக, 1.04 லட்சம் கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடின உழைப்பு மூலம் குடிமக்கள் ஈட்டிய வருவாயை, மீண்டும் அவர்களுக்கு சென்றடைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் 2035ம் ஆண்டுக் குள் மக்களிடையே நிலவும் காலனித்துவ மனநிலையை அகற்றி, நாம் மற்றவர்களின் கால்தடங்களை பின்பற்றாமல், நம் பாதையில் தடம் பதிக்க வேண்டும். நம் முன் உள்ள எல்லா சவால்களையும் முறியடித்து, முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

skv srinivasankrishnaveni
டிச 07, 2025 07:46

முக்கிய காரணம் ஆட்சியின் அவன்தரைக்கோலம் மக்களின் சோம்பேறித்தனம் எல்லாமே கணினிமயம் காசுப்புழக்கம் அதிகம் எவ்லோவிலைச்சொன்னாலும் மக்கள் தேவையே இல்லேன்னாலும் வாங்கும் குணம் வீணாக்கும் புத்தி உடலுழைப்பு மறந்தது வேண்டாத பொழுதுபோக்குகள் நேரத்தின் காலத்தின் அருமைபுரியாத nilaimai


Indian
டிச 07, 2025 07:32

என்று மத வெறியை கை விட்டு, சட்டங்களை கடுமையாக மாற்றி கொள்கிறீர்களோ குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றம். அப்போ தான் வளர்ச்சி ஏற்படும். துபாய் இல் அப்படி வளர்ச்சி இப்படி வளர்ச்சி என செய்தி போடுகிறீரகள். அங்கே நடு இரவு 1.00 மணிக்கும் பெண்கள் தைரியமாக வெளியில் பாதுகாப்பாக போகலாம் ..தெரியுமா இது ???


முருகன்
டிச 07, 2025 07:52

பழைய கதை நமக்கு எதற்கு இனியாவது வளர்ச்சி வேலை வாய்ப்பு மருத்துவ வசதி பெண்கள் குழந்தைகள் எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை என செயல் பட வேண்டும்


vivek
டிச 07, 2025 07:57

அதுக்கு காரணம் இங்கே இருக்கும் திருட்டு திராவிட கூட்டம்


அப்பாவி
டிச 07, 2025 06:07

முய்ணு வருஷமா என்னுடைய iTC பங்குகளை iepf மிடமிருந்து மீட்க போராடிக்கிட்டிருக்கேன். உயிரோட இருக்குற எனக்கு டெத் சர்டிபிகேட் கேக்ட்கிற அவலம். இதுல தொலை நோக்காம். பார்வையாம்.


vivek
டிச 07, 2025 07:02

காசா பணமா. அடிச்சி விடு ....


vivek
டிச 07, 2025 07:03

நீ நேர்மையா சேர்த்த பணமா இருக்காது


SUBBU,MADURAI
டிச 07, 2025 05:43

High growth and low inflation- a planned strategy for long term growth, not short term elusion: PM Modi decodes long term strategy for the growth of the Indian economy. The secret is tapping to our untapped resources like north east, blue economy, women power, youth power etc...


SUBBU,MADURAI
டிச 07, 2025 05:16

PM Modi is very high. No other politician has enjoyed so much love from the people.


SUBBU,MADURAI
டிச 07, 2025 05:09

Many Western nations look at India-Russia friendship and complain: Why India and Russia? If India is a democracy, why would it align itself with a dictatorship? The answer is simple. We align with Russia precisely because it is a dictatorship. We love dictatorships for the same reason you in the West love dictatorships. Dictatorships have policy continuity. For decades. Dictators dont change. Dictators dont have to worry about what their people think. That is great from a foreign policy point of view. If India aligns with the US, we have to constantly be on tenterhooks. Every 4 years, we have to worry about a new President. With every election cycle, the mood changes in the US. Where does that leave US allies? Ironically, this means two democracies can be allies only in very limited situations. Perhaps when the civilizational and cultural connections between the two are so deep that mood swings don't matter. Like the US and Canada. Like the US and most of Europe. But India simply doesnt have that kind of deep connect with America. And these days, even Americas traditional allies in Europe and Canada cannot count on them. And you in the West love dictatorships too. In Africa, in South America, in the Middle East, you have always supported dictatorships for the same reason. You know you can count on despots. You cant count on popular mood. Its too fickle. This is also the reason the West loves Pakistan. Precisely because Pakistan is not democratic.


கணேஷ் எஸ்
டிச 07, 2025 05:08

ஆம், குறிப்பாக இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் முகலாய ஆட்சியாளர்களால் மிகவும் பாதிக்கப்பட்ட வட இந்திய மக்கள் அப்போது தங்கள் சமூக வழக்கங்களை மாற்றிக் கொண்டனர்.தங்களை இந்துக்கள் என்று கண்டு பிடித்து விடுவர் என பயந்து வாசலில் கோலம் போடுவதை தவிர்த்தனர்.நள்ளிரவில் திருமணம் செய்தனர். பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டனர். அவர்கள் சுதந்திரம் அடைந்த பின்னும் இந்த வழக்கங்களை இன்றும் மாற்றிக் கொள்ளவில்லை. யோகி மோடி போன்ற தலைவர்கள் மாற்ற முயற்சிக்கவில்லை. ஆனால் தென்னிந்திய மக்கள் இஸ்லாமிய படையெடுப்பால் அதிகம் பாதிக்கப்படவில்லை.அதனால் அவர்கள் வாசலில் கோலம் போடுவது பகலில் திருமணம் செய்வது போன்ற வழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ