உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்வெளியில் இந்தியாவின் ரோபாட்டிக் கைகள்; மைல்கல் என இஸ்ரோ பெருமிதம்

விண்வெளியில் இந்தியாவின் ரோபாட்டிக் கைகள்; மைல்கல் என இஸ்ரோ பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ரோபாட்டிக் கைகள் செயல்பாட்டை துவங்கின என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தையும், வரும் 2035ல் விண்வெளியில் விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு, பல செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதற்கான சோதனை முயற்சிக்காக தற்போது தலா, 220 கிலோ எடையில், ஸ்பேடெக்ஸ் - ஏ, ஸ்பேடெக்ஸ் - பி ஆகிய இரு செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=smiz4vxk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவற்றுடன் இஸ்ரோவின், 14 ஆய்வு கருவிகள் மற்றும் கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள 10 ஆய்வு கருவிகள் ஆகியவற்றை சுமந்தபடி, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி60 ராக்கெட், ஆந்திர மாநிலம், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்கள், 15வது வினாடியில், ஸ்பேடெக்ஸ் - பி செயற்கைக்கோளை திட்டமிட்டபடி, 476.84 கி.மீ., உயரமுள்ள புவி வட்டப்பாதையில் ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அதை தொடர்ந்து, 476.87 கி.மீ., உயரமுடைய வட்டப் பாதையில் ஸ்பேடெக்ஸ் - ஏ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜன.,04) பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் குறித்து ஒரு வீடியோ ஒன்றை இஸ்ரோ சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. மேலும்,'பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ரோபாட்டிக் கைகள் செயல்பாட்டை துவங்கின. விண்வெளியில் செயல்படும் இந்தியாவின் முதல் ரோபாட்டிக் கைகள். இது ஒரு மிகப்பெரிய மைல்கல்' என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

raja
ஜன 04, 2025 17:46

வாழ்த்துக்கள்...


Dharmavaan
ஜன 04, 2025 13:31

இவ்வளவு ஞான முடைய விஞ்ஞானிகள் கடவுளிடம் பூஜை செய்துவிட்டு ராக்கெட் விடுகிறார்கள் இங்குள்ள மூட நாத்திகன் அறிவிலி கேள்வி கேட்கிறான்


Ramesh Sargam
ஜன 04, 2025 13:18

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். ஒரு பக்கம் இந்திய விஞ்ஞானிகள் பல சாதனைகளை செய்து நாட்டுக்கு பெருமை சேர்க்கிறார்கள். மறுபக்கம்.........? மறுபக்கம், ஊழல் அரசியல்வாதிகள் அசிங்க அரசியலில் ஈடுபட்டு, நாட்டுக்கு அவப்பெயர் சேர்க்கிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் ஒழியவேண்டும்... நாடு உருப்படவேண்டுமென்றால்.


sundarsvpr
ஜன 04, 2025 13:11

தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் காண்பது பெருமிதம்தான். இதனால் மனித குலத்திற்கு என்ன நன்மை என்பது கேள்வி குறி. உள்நாட்டில் நடக்கும் அவலங்களையும் கண்காணித்து தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தால் உலகளவில் இதற்கு கண்டனங்கள் கிடைக்கும். ஒரு செய்தி. ஒரு ஊரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தான் வீரர்கள் அணியும் சட்டை அணிந்து ஊர்வலம் வந்தார்கள். இது உண்மை எனின் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் ஒரு பெருமையா?


Yes your honor
ஜன 04, 2025 13:10

இஸ்ரோ இவ்வளவு சாதனைகளை படைப்பதன் காரணம் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள பட்ஜெட் பெர்மிஷன், மேலும் மிக திறமையான இந்திய வின்ஞானிகள். பட்ஜெட் ஒதுக்காமல் மொத்தத்தையும் வீட்டில் கொண்டுபோய் வைத்துக்கொண்டதே, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இஸ்ரோவால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாமல் போனதற்கு, காரணம்.


Kannan
ஜன 04, 2025 12:50

நன்று வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை