உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இஸ்ரோவின் 100வது ராக்கெட்; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., எப்15

இஸ்ரோவின் 100வது ராக்கெட்; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., எப்15

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ சார்பில் ஜி.எஸ்.எல்.வி., எப்15 ராக்கெட், இன்று ஜன.,29ம் தேதி காலை 6:23 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது.விண்வெளி துறையில் உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரோவின் 100வது ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vqclzzkp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று (ஜன.,29) காலை 6.23 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு, இந்திய தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்த ராக்கெட், ஜி.பி.எஸ்., சேவை அளிப்பதற்கான என்.வி.எஸ்.,01 என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தியது. இந்த NVS -02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும்.

இந்தியா சாதனை!

இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: * இந்தியா சாதனை படைத்துள்ளது. * விக்ரம் சாராபாய் முயற்சியில் தொடங்கப்பட்ட ராக்கெட் கனவு திட்டம் 100ஐ தொட்டுள்ளது. * 100 ராக்கெட்கள் மூலம் 548 செயற்கைக்கோள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன.* இஸ்ரோவின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சோலை பார்த்தி
ஜன 29, 2025 13:39

விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..


Barakat Ali
ஜன 29, 2025 13:18

வாழ்த்துக்கள் .....


KavikumarRam
ஜன 29, 2025 12:17

தற்போதைய அரசு இருக்கும்வரை தான் இந்த மாதிரி சாதனைகள் சாத்தியம்.


M. PALANIAPPAN
ஜன 29, 2025 10:04

மோடி ஜியின் முழு பின்பலம் இருக்கும் வரை இந்தியாவில் எல்லாம் நடைமுறை படுத்த முடியும், எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க முடியும். வாழ்க பாரதம், ஜெய்ஹிந் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்


அன்பே சிவம்
ஜன 29, 2025 08:12

வரவேற்கத்தக்கது! வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!


Kasimani Baskaran
ஜன 29, 2025 07:34

இமாலய சாதனைக்கு வாழ்த்துகள்..


நிக்கோல்தாம்சன்
ஜன 29, 2025 07:12

இது can carry 4 tonnes of payloads into GTO and 10 tonnes into லியோ என்று குறிப்பிட்டுள்ளனர் , அது வரவேற்கத்தகுந்த முன்னேற்றம்


Palanisamy Sekar
ஜன 29, 2025 07:04

என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள்.. மோடிஜி வந்தபிறகு விண்வெளியில் இந்தியாவின் ஆதிக்கத்தை பிற உலக நாடுகளால் தடுக்கமுடியவில்லை...அல்லது இந்தியாவை காட்டிலும் சிறப்பாக செயல்பட முடியவில்லை. நம்ம நாட்டில் உள்ள அறிவாற்றல் உள்ள விஞ்ஞானிகள் போல எங்கும் பார்க்க முடியாது. குறைந்த சம்பளமே என்றாலும் கூட சிறப்பாக பணியாற்றுகின்றார்கள். அனைவரையும் வாழ்த்துவோம் மகிழ்ச்சியோடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை