உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு அலுவலகங்களில் தம் அடிக்க தடை! ஊழியர்களுக்கு கர்நாடகா அதிரடி தடா

அரசு அலுவலகங்களில் தம் அடிக்க தடை! ஊழியர்களுக்கு கர்நாடகா அதிரடி தடா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு; அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்த கர்நாடகா அதிரடியாக தடை விதித்துள்ளது.இதுகுறித்து கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; கர்நாடக அரசு அலுவலகங்களில், சட்டப்பூர்வ எச்சரிக்கைகளை மீறி, வளாகங்களில் ஊழியர்கள் சிகரெட் பிடிப்பது, புகையிலை பொருட்களை மெல்லுவது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. ஊழியர்கள் உடல்நலம், பொதுமக்களை பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருட்களை அரசு அலுவலர்கள் உட்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.இதுதொடர்பான எச்சரிக்கை வாசகங்களுடன் கூடிய அறிவிப்பு பலகை, அலுவலகங்களில் பொருத்தமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதை மீறி, அலுவலகம் அல்லது அலுவலக வளாகங்களில் புகையிலை பொருட்கள்( குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை) போன்றவற்றை உட்கொள்வது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இதேபோன்று பொது இடத்தில் போதை தரக்கூடிய எந்த ஒரு பானத்தையும், போதை பொருளை உட்கொள்வதும் தடை செய்யப்படுகிறது.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்ப்டடு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman Srinivasan
நவ 08, 2024 22:36

இனி கர்நாடக அரசு அலுவலகத்தின் ரெஸ்ட் ரூம் சிகரெட் நாற்றமெடுக்கும், புகைமண்டலமாக காட்சியளிக்கும்.


Ramesh Sargam
நவ 08, 2024 19:57

ஏன் இந்த தம் தடை? ஒருவேளை தம் உற்பத்தி செய்பவர்கள் அரசுக்கு சரியாக மாமூல் கொடுப்பதில்லை போலும்...


Ramesh Sargam
நவ 08, 2024 19:56

இந்த தம் தடை ஆட்சியில் உள்ள அமைச்சர்களுக்கும் பொருந்துமா? ஏன் என்றால் ஒரு சில அமைச்சர்களுக்கு அந்த தம் பழக்கம் உண்டு?


சமூக நல விருப்பி
நவ 08, 2024 19:06

திமுக திராவிட மாடல் அரசு அலுவலகத்தில் தண்ணி அடித்து விட்டு வந்தால் கூட கேட்க நாதி கிடையாது.


D.Ambujavalli
நவ 08, 2024 17:57

நம் மாநிலத்தில் இம்மாதிரி அறிக்கை விட்டால் காவல் துறை உள்பட போதையில் வராத அலுவலர்களை தேடித்தான் பார்க்க வேண்டும்


கூமூட்டை
நவ 08, 2024 17:46

எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்


Ram pollachi
நவ 08, 2024 17:29

புகை உள்ளே சென்றால் தான் கழிவு வெளியே வருகிறது! பொது இடங்களில் கண்டபடி ஊதுபவர்களையும் கட்டுப்படுத்துங்கள்...


Suppan
நவ 08, 2024 16:29

சரியான உத்தரவு. இதே மாதிரி குளிர் "பானங்கள்" என்ற விஷத்தையும் அலுவலகண்களிலும் தடை செய்யவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை