மேலும் செய்திகள்
காசி தமிழ் சங்கமம் 4.0 துவக்கம்: பிரதமர் வாழ்த்து
3 hour(s) ago | 2
வாரணாசி: '' தமிழக மக்களின் இதயத்தில் காசி வாழ்கிறது,'' என காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் கவர்னர் ரவி கூறினார்.தமிழகத்துக்கும், காசி நகருக்கும் இடையே உள்ள ஆழமான நாகரிக தொடர்புகளை கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமம் 4.0 பதிப்பை மத்திய கல்வி அமைச்சகம் டிச., 2 முதல் டிச., 15 வரை நடத்துகிறது. இதன் கருப்பொருளாக ' தமிழ் கற்கலாம்' என அறிவிக்கப்பட்டு உள்ள இந்நிகழ்வு வாரணாசி நகரில் துவங்கியது. இதில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், தமிழக கவர்னர் ரவி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.முக்கிய நோக்கம்
விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் விழாவிற்கு தமிழகத்தில் இருந்து வந்தவர்களை வரவேற்கிறேன். காசி மற்றும் தமிழகத்துக்கு இடையேயான இணைப்பு பல ஆண்டுகள் பழமையானது. சுமார் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன், கங்கை நீரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு கொண்டு சென்றார். சிறந்த புரட்சியாளர் விடுதலை போராட்ட வீரர் மகாகவி சுப்ரமணிய பாரதி காசியில் படித்தார். இது நமக்கு தெரியும். காசி தமிழக மக்களின் இதயத்தில் வாழ்கிறது. காரணம், காசி சிவனின் முக்கியமான ஸ்தலம். தமிழகத்தையும், தமிழக மக்களையும் பிரதமர் மோடி தனது மனதில் வைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் காசி தமிழ் சங்கமத்துக்கு முக்கிய நோக்கம் உண்டு. பனாரஸ் ஹிந்து பல்கலையில் பாரதியாருக்கு இருக்கையை பிரதமர் ஏற்படுத்தி கொடுத்தார். அங்கு தமிழ் டிப்ளமோ படிப்பு கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.நாகரிக உறவு
இந்த விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: இன்று காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பை துவக்கி வைக்க நாம் அனைவரும் இங்கு வந்துள்ளோம். இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளாக தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்பதாகும். குறுகிய அரசியல் நலன்கள் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒரு சில நண்பர்கள், மொழியின் அடிப்படையில் பிரிவினையை உருவாக்க விரும்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், காசி தமிழ் சங்கமம் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினேன். பிரதமர் மோடியின் தலைமையில், காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே அறிவுப்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் காசிக்கு இடையே நூற்றாண்டு பழமையான நாகரிக உறவு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தமிழ் படிக்கின்றனர்
மத்திய அமைச்சர் எல். முருகன் பேசியதாவது: இந்தாண்டின் கருப்பொருளாக தமிழ் கற்கலாம் என்பதாகும். தமிழக ஆசிரியர்கள் இங்கு வந்து, இங்கு பல்வேறு பள்ளிகளில் தமிழ் கற்பிக்கின்றனர். இங்குள்ள மாணவர்களும் தமிழகம் சென்று தமிழ் படிக்கின்றனர். இது மிகப்பெரிய கலாசார பரிமாற்றம் ஆகும். இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் இடையிலானது மட்டுமல்ல. இங்கு இருந்து மக்களை ராமேஸ்வரம் அழைத்து செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
3 hour(s) ago | 2