உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசி தமிழ் சங்கமம் 4.0 துவக்கம்: பிரதமர் வாழ்த்து

காசி தமிழ் சங்கமம் 4.0 துவக்கம்: பிரதமர் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நான்காவது பதிப்பு இன்று (டிச.,2) துவங்கியது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழகத்துக்கும் , காசி நகருக்கும் இடையே உள்ள ஆழமான நாகரிக தொடர்புகளை கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமம் 4.0 பதிப்பை மத்திய கல்வி அமைச்சகம் டிச., 2 முதல் டிச., 15 வரை நடத்துகிறது. இதன் கருப்பொருளாக ' தமிழ் கற்கலாம்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து ஏழு குழுக்கள் காசிக்கு வர உள்ளன.இந்த நிகழ்ச்சி இன்று துவங்கியது. இதில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் தமிழக கவர்னர் ரவி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காசி தமிழ் சங்கமம் இன்று துவங்கிய நிலையில் ' ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுப்படுத்தும் இந்த துடிப்பான நிகழ்ச்சிக்கு எனது வாழ்த்துகள். காசி தமிழ் சங்கமத்துக்கு வரும் அனைவருக்கும் காசியில் இனிமையான மற்றும் மறக்க முடியாத நினைவுகள் அமையட்டும்.இவ்வாறு அந்த பதவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ