உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணிவகுப்பு நிகழ்ச்சியில் யானைகள் படும் துயரம்; வேதனை தெரிவித்த கேரளா ஐகோர்ட்; கட்டுப்பாடுகள் விதிப்பு

அணிவகுப்பு நிகழ்ச்சியில் யானைகள் படும் துயரம்; வேதனை தெரிவித்த கேரளா ஐகோர்ட்; கட்டுப்பாடுகள் விதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது. வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கேரளா ஐகோர்ட் தடை விதித்தது. கேரளாவில் நடக்கும் அணிவகுப்பில், யானைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து கேரளா ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயசங்கரன், கோபிநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:* அணிவகுப்பு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது. * யானைகளை அணிவகுப்பு நிகழ்ச்சியில், பயன்படுத்தும் போது கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.* உடற்தகுதி சான்றிதழ்களை அரசு கால்நடை டாக்டர் மட்டுமே வழங்க வேண்டும். * காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொது சாலைகளில் யானைகள் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை.* யானையை ஒரு நாளில் 125 கி.மீ.க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. ஒரு நாளில் எந்த யானையையும் வாகனத்தில் 6 மணி நேரத்திற்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது.* இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை யானையை வாகனங்களில் ஏற்றிச் செல்லக் கூடாது. * இரண்டு யானைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 3 மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.*வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கூடாது என கேரளா ஐகோர்ட் தடை விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ram pollachi
நவ 15, 2024 13:52

சர்க்கஸ் நிறுவனத்தை நடத்தி வாழ்க்கை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலும் இந்த மாநில மக்கள் அப்போது இது பற்றி வேதனையாக இல்லை, சுற்றுலா என்ற பெயரில் ஜம்பு சவாரி என்ன சுகம், காட்டில் கூடாரம் போட்டு வன விலங்குகளுக்கு தொல்லை தருவது தெரியாது, ஆனால் பூரம் அணிவகுப்பு பிடிக்கவில்லை, இரயில் அடிபட்டு சாவது வேதனை இல்லை... யானையை கட்டி சோறு போடுவது மிகவும் கடினம். யானை மேல் காட்டும் அதே அக்கறை எருமை மாடு, பன்றி, கோழிகளிடம் காட்டினால் என்ன ஆகும்... இந்த கதகளி ஆட்டம் தான் வேண்டாங்கிறது.


Barakat Ali
நவ 15, 2024 11:54

மற்றவர்களுக்கு உபதேசிக்கும் மாநிலம் கேரளா .......


sundarsvpr
நவ 15, 2024 11:27

யானையின் லத்தியை 50 அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன் காலால் மிதிப்பார்கள் விளையாட்டு அல்ல. மருத்தவ குணம் என்று கருதி. இப்போது இவ்வாறு செய்வது இல்லை. கோயில்களில் யானை குதிரை ஒட்டகம் வளர்ப்பார்கள். குறிப்பாய் யானைகளுக்கு திருக்கோயில்களில் கொப்பரையில் வடித்த சாதம் 50 அல்லது 60 கவளம் துதிக்கையில் கொடுப்பார்கள். பார்க்க வேடிக்கை அழகாய் இருக்கும் இதனால் காலத்தில் மழை ஜீவ காருண்யம் என்ற இலாகா அரசில் இருந்தால் மிருக கொலைகள் குறையும்.


அப்பாவி
நவ 15, 2024 08:39

மூணு மாசத்திலேயே தாயை விட்டுப் பிரிச்சு குழியில் தள்ளி உதைச்சு யானைகளுக்கு தன் சக்தி என்னன்னு தெரியாமலேயே வளர்த்து சாமிக்கு சல்யூட் அடிக்கும் டிரெய்னிங் குடுக்கும்.கேவலம் இந்தியாவில் தான் நடக்குது.


sundarsvpr
நவ 15, 2024 08:27

மிருகங்கள் புனிதமானவை. எனவே பகவான் குதிரை யானை எருது வாகனங்களில் பவனி வருகிறான். மனித வாகனத்தில் பவனி வருவதாக தெரிவதில்லை. ராமாயணத்தில் மட்டும் ஆஞ்சேநேயர் மீது பவனி வந்தார். ஆஞ்சேநேயர் வானர சாதி. திரை படங்களில் மிருகங்களை பார்த்தால் சலிப்பு ஏற்படுவதில்லை. எப்படி அடுத்தவனை விமர்சிக்க நமக்கு யோக்கியதை இல்லையோ அதுபோல் மிருகங்களை துன்புறுத்த நமக்கு பாத்தியதை கிடையாது.


அப்பாவி
நவ 15, 2024 17:40

குபேரனுக்கு நர , அதாவது மனித வாகனம் ஸ்வாமி.


மணியன்
நவ 15, 2024 08:23

நாய், மயில், யானை, பன்றி, எலி போன்ற பயிர்களை அழிக்கும் வகைகளுக்கு இவ்வளவு ஆதரவளிக்கும் நீதிமன்றங்கள் அந்த பயிர் அழிவில் நஷ்டமடையும் நாட்டுக்கு உணவிடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏதாவது செய்யலாமே.


Rpalnivelu
நவ 15, 2024 08:04

உயிரினங்களை துன்புறுத்துதல் கடவுளுக்கே ஆகாது. கடவுளை மட்டுமே அவை சுமக்க வேண்டும். வெகு ஒரு சில கோவில் நிகழ்ச்சிகளை தவிர வேறெங்கும் பயன்படுத்த கூடாது. யானை வழிப் பாதை ஆக்ரமிப்பாளர்களின் சொத்துகளை அழித்தொழித்தல் நலம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை