உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்கள் கையில் தாமரை மலர் காங்., - எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா கடுப்பு

மாணவர்கள் கையில் தாமரை மலர் காங்., - எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா கடுப்பு

ஹாசன் -நடனமாடும்போது, பள்ளி மாணவர்கள் கையில் தாமரைப்பூ கொடுத்த ஆசிரியை மீது, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா கொதிப்படைந்தார்.குடியரசு தினத்தை ஒட்டி, ஹாசன், அரசிகெரேவில் அரசு பள்ளியில் நேற்று கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் அரசிகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா பங்கேற்றார்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் கையில், தேசிய மலரான தாமரைப்பூவை கொடுத்து நடனமாட வைத்தனர். இதைக் கண்டு கோபமடைந்த சிவலிங்கே கவுடா, “பிள்ளைகளின் கையில், பா.ஜ.,வின் சின்னமான தாமரைப்பூவை ஏன் கொடுத்தீர்கள்? அதை எடுங்கள்,” என, ஆசிரியையை சாடினார்.அப்போது ஆசிரியை, “சார், தாமரை, தேசிய மலர். எனவே அதை மாணவர்கள் கையில் கொடுத்தோம். அனைத்து தேசிய சின்னங்களையும் போட்டுள்ளோம். அதில் என்ன தவறு?” என கேள்வி எழுப்பினார்.சமாதானமடையாத சிவலிங்கே கவுடா, “ஏய் உனக்கு என்ன தெரியும்? பா.ஜ.,வின் சின்னத்தை கொடுத்துள்ளீர்கள். பிள்ளைகளை எப்படி முன்னேற்றுகிறீர்கள்?” என, ஏக வசனத்தில் திட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ