உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னவிஸ்

மஹாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னவிஸ்

மும்பை : மஹாராஷ்டிராவின் புதிய முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ் இன்று பதவியேற்றார். முதல்வர் பதவி யாருக்கு என்பதில், 10 நாட்களுக்கு மேல் நீடித்த இழுபறி ஓய்ந்தது.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., - சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 230ஐ கைப்பற்றி வரலாறு படைத்தது. அதில், 132 தொகுதிகளை வென்ற பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 57 இடங்களையும், அஜித்தின் தேசியவாத காங்., 41 இடங்களையும் பிடித்தன.அதிக தொகுதிகளை வென்றதால், பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று அக்கட்சி கேட்டது. முதல்வர் பதவி கைவிட்டு போவதை ஷிண்டேயால் ஜீரணிக்க முடியவில்லை; துணை முதல்வர் பதவியை ஏற்கவும் சம்மதிக்கவில்லை. இதனால் இழுபறி நிலவியது. ஷிண்டே பிடி கொடுக்காமல் இழுத்தடித்ததால் கடுப்பான பா.ஜ., மேலிடம், மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில், 5ம் தேதி புதிய அரசு பதவி ஏற்கும் என அறிவித்து அதற்கான பணிகளை துவக்கியது. முதல்வர் யார் என்பதே தெரியாமல் பதவியேற்பு விழா ஏற்பாடு நடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், மும்பையில் நேற்று பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. கட்சியின் மேலிட பார்வையாளர்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பங்கேற்றனர். சட்டசபைக்கான பா.ஜ., தலைவராக தேவேந்திர பட்னவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஷிண்டே, அஜித் ஆகியோருடன் ராஜ்பவன் சென்றார்.கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தையும், கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தையும் கொடுத்தார். இன்று மாலை 5:30 மணியளவில் தேவேந்திர பட்னவிஸ்க்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பட்னவிஸ் முதல்வராக பதவியேற்பது இது மூன்றாவது முறை. உடன், அஜித் பவார் மற்றும் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்றனர். விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

ஒற்றுமையாக பணியாற்றுவோம்

''ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருடன் இணைந்து கூட்டணி அரசை வழிநடத்துவேன். ஒற்றுமையாக இருந்து, மக்களுக்காக பணியாற்றுவோம். துணை முதல்வர்களாக இருவர் பதவியேற்பர். அமைச்சரவை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை'' என தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

நான் செலுத்தும் நன்றிக்கடன்

''இரண்டரை ஆண்டுகளுக்கு முன், முதல்வராக என் பெயரை தேவேந்திர பட்னவிஸ் முன்மொழிந்தார். அதற்கு நன்றியாக, இந்த முறை அவரது பெயரை நான் முன்மொழிந்தேன். பட்னவிசுக்கு வாழ்த்துகள்'' என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

ganesh
டிச 05, 2024 20:27

காங்கிரஸ் கூட்டணியை மக்கள் விரட்டியுள்ளார்கள்.


Sampath Kumar
டிச 05, 2024 16:42

பாட்னா விஸ் கூடிய விரைவில் புதனை விஷ ஆக போகிறாரா கூட்டணிகட்சின் கொடுமைகளை பிஜேபி அனுபவிக்கும் காலம் இது இதில் சங்கிகள் காங்கிரஸ் கரனையும் மற்ற காட்சிகளையும் கலைப்பதுதான் பேடித்தனம்


ஆரூர் ரங்
டிச 05, 2024 16:31

பிஜெபி யிடமிருந்து பால் தாக்கரே ஹைஜாக் செய்த ஹிந்துத்துவ அரசியலை மீட்டுள்ளார் ஃபட்னாவிஸ். ஷிண்டே நிலைமை பரிதாபம். மீண்டும் மீண்டும் தாக்கரே குடும்பம் பக்கமோ காங்கிரஸ் பக்கமோ போக முடியாத இரண்டுங்கெட்டான் நிலைமை. இப்போதெடுத்திருக்கும் நிலையை தேர்தல் முடிவுகள் வந்தபோதே எடுத்திருக்கலாம். இனிமேல் எழுந்திருப்பது கஷ்டம்.


venugopal s
டிச 05, 2024 15:13

எச்சில் இலைக்கு அடித்துக் கொண்டு சண்டை போடும் பிச்சைக்காரர்கள் போல் தெரிகிறது!


Bye Pass
டிச 05, 2024 17:28

உங்களுக்கு தான் தெரியும் .பாம்பின் கால் பாம்பறியும் தானே ..


ஆரூர் ரங்
டிச 05, 2024 18:48

ஈவேராவும் அண்ணா/ கருணாநிதியும் சொத்து எனும் எச்சிலுக்காக அடித்துக் கொண்ட வரலாறு தெரியுமா?. பரிமாறிக் கொண்ட அச்சிட முடியாத வார்த்தைகளைத் தெரியுமா ?


Narasimhan
டிச 05, 2024 19:03

இருநூறு ரூபாய்க்கு அலையும் மக்கள் அங்கிருப்பவர்கள் என்று நினைத்தீரோ?


பாமரன்
டிச 05, 2024 10:17

இன்னும்... இதுல 2026 லில் ஆட்சியை புடிக்க போறானுவலாம்...


Mettai* Tamil
டிச 05, 2024 11:23

2026 ல் ஊழல், பிரிவினைவாதம், ஹிந்து மத எதிர்ப்பு கூட்டணி தோல்வி உறுதி .......


Raj S
டிச 06, 2024 00:24

கதறு நல்லா கதறு... கோபாலபுர கொத்தடிமைகள் திருட்டு திராவிட கும்பல் வயிறு எரியணும்னுதான் அப்படி அவங்க சிரிக்கிறாங்க...


Velan Iyengaar
டிச 05, 2024 08:52

ஆளுக்கொரு அனுபவமாம்... கேடுகெட்ட அனுபவத்தை பொதுவெளியில் சொல்லி வெட்கம் மானம் இல்லாமல் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டுள்ளனர் ...உள்ளுக்குள்ளே எவ்வளவு ஒவ்வொருவருக்கும் எரியும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளமுடியும் ... கேடுகெட்ட கூட்டணி ..... கொள்கை சார்ந்த கூட்டணி அல்ல ...கொள்ளை அடிக்க சேர்ந்த கூட்டணி ...


மணியன்
டிச 05, 2024 10:21

ஆஸ்ட்ரேலியாவுக்கு ஒரு 200 ஒஸ்ட்ரேலியன் டொலர் உடனே அனுப்பவும்.


KumaR
டிச 05, 2024 10:49

உங்க திருட்டு திராவிட இண்டீ கூட்டணி கொள்ளை அடிக்க வந்த வெறி புடிச்ச கூட்டம்..


Mettai* Tamil
டிச 05, 2024 11:27

என்ன கேடுகெட்ட அனுபவம் ....தி மு க வை விடவா ? இண்டி கூட்டனி தான் தேச பிரிவினைக்காகவும் ,கொள்ளை அடிக்கவும் சேர்ந்த கூட்டணி ...


I am a Sanghi + Kafir…but not a Family slave
டிச 05, 2024 19:18

இண்டி கூட்டணியா ? அப்படினா 100% கரெக்ட்


Velan Iyengaar
டிச 05, 2024 08:47

கேடுகெட்ட நாருடன் சேர்ந்த இன்னொரு நார் எப்படி மணக்கும் ??? பதவி வெறி மற்றும் அதிகாரம் ஆசை ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொண்டு அசிங்கப்பட்டுக்கொண்டு இருக்குது ....


Mettai* Tamil
டிச 05, 2024 11:30

60 வருசமா நாறிக்கொண்டிருக்கும் நாரை விடவா , அங்க நாற போகுது .....


பாமரன்
டிச 05, 2024 08:37

இதுக்கு எங்க பழைய காசி பாணியில் சொன்னால் கேவலம்...


Jayaraman Rangapathy
டிச 05, 2024 07:23

நானும் தான்


Kasimani Baskaran
டிச 05, 2024 06:37

என் சி பி மற்றும் சேனா உடைப்பு பிரமாதம். இதே பாணியில் தமிழகத்தில் திராவிட உடைப்பை காண ஆவலோடு காத்திருக்கிறேன்..


Dharmavaan
டிச 05, 2024 07:20

உடைந்தால் தமிழ் நாட்டுக்கு நல்ல காலம்


Narayanan Muthu
டிச 05, 2024 08:23

பகல் கனவு நிறைவேறாது. இங்கு பஜவிற்கு உயிர் கிடையாது. அதனால் அது எழுந்திருக்கவே முடியாது. அதை ஏதாவது ஏமாந்த கட்சிகள் தாங்கி தூக்கிப்பிடித்தால்தான் உண்டு.


பாமரன்
டிச 05, 2024 08:46

காசி...அவனுவ வடாப்பாவ் மடையனுவ..எடக்குமடக்கா ஃப்ராடுங்க பண்ணி ப்ளாட்ஃபாரம். ரொம்ப வருஷமா ரெடியா வச்சிருந்தானுவ.... அதுலகூட தனக்கும் பவர் இருந்து அவனுவ கூட பல வருடங்களாக ட்ராவல் பண்ணி குடும்பத்தில் கோளாறு பண்ணி இப்போ தான் சக்ஸஸ் பார்த்திருக்கோம்... பண்ணுன கொழப்பத்துல நாமே கொழம்பி நமக்கு தல மாங்காவ கண்டுபிடிக்க பத்து நாள் ஆகிடுச்சு... ஆனா திராவிஷன்ககிட்ட இந்த டகல்பாஜி செலாலுபடியாகததால நாமே இன்னும் தவழ்துகிட்டு தான் இருக்கோம்... முதல்ல மல்லாருவோம் அப்பாலிக்கா யார் கொண்டையில் குந்தி கலீஜ் பண்றதுன்னு யோசிக்கலாம்...ஓகேவா... ரொம்ப கனவெல்லாம் பிடாது...


Velan Iyengaar
டிச 05, 2024 09:27

காசி மணிக்கு யோக்கியமா யோசிக்கவே தெரியாது ....


Mettai* Tamil
டிச 05, 2024 11:46

பாமரன் , 1967 ல் ஊழல் இல்லா நிர்வாகம் தந்த காமராஜரை தோற்கடித்து, எந்த வடாப்பாவ் மடையனுவ..எடக்குமடக்கா ஃப்ராடுங்க பண்ணி தி மு க ஜெயித்ததோ, அதே ஆளுங்க தான், ஓட்டுக்கு ஊழல் பணம் கொடுத்தாலும் மாற்றத்தை கொடுப்பது வெகு தூரம் இல்லை ....எப்பவோ தவழ்ந்து இப்ப ஓடிக்கிட்டு இருக்கு .எந்த கொண்டையிலும் குந்தி கலீஜ் பண்றது நம்ம வேலை இல்லைங்க ...ரொம்ப நாளா கலீஜ் ஆகி கிடைக்கிறத கிளீன் பன்னத்தான் அண்ணாமலை வருகிறார் .ஓகேவா... ரொம்ப முட்டெல்லாம் உடம்புக்கு ஆகாதுங்க ....


Mettai* Tamil
டிச 05, 2024 11:48

காசி மணிக்கு அயோக்கியமா யோசிக்கவே தெரியாது ....


Mettai* Tamil
டிச 05, 2024 11:59

நாராயணன் முத்து , கனவல்ல நிஜம். இங்கு பா ஜ க விற்கு ஆருயிர் துடிப்போடு உள்ளது ..ஊழலை ஹிந்து மத எதிர்ப்பு கூட்டணியை, முட்டு கொடுத்து தாங்கி தூக்கிப்பிடித்தாலும் எழுந்திருக்கவே முடியாத படி செய்யும் வலிமை உண்டு ...


Kasimani Baskaran
டிச 05, 2024 16:44

திராவிடம் என்றால் ஒரு வகை சமூக தீவிரவாதம் என்று புரியாத பலர் திராவிடக்குடும்பம் யோக்கியர்கள் போலவும், அவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தமிழகமே தழைத்தோங்கி விடும் என்பது போல உருட்டுவது சகிக்கவில்லை. நிர்வாகம் எசப்பாடியை விட நூறு மடங்கு மோசம். சினிமாவே அவர்களுக்கு சொந்தம் போல ஆக்கிரமித்து இருக்கிறார்கள். நில அபகரிப்பு 2G2 மூலம் ஏராளமாக நடந்து இருக்கிறது. அது மட்டுமல்ல அயலக அணியை வைத்து போதைப்பொருள் கடத்தி அந்த லாபத்தில் சினிமாவில் திருவிளையாடல். இதெல்லாம் கேவலமாக தெரியவில்லை என்றால் பின்னூட்டம் போட்டவர்கள் கேவலமானவர்கள்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை