உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்க ரூ. 7.5கோடி லஞ்சம்: மருத்துவ கல்லூரியில் ரெய்டு:- இயக்குனர் தலைமறைவு

எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்க ரூ. 7.5கோடி லஞ்சம்: மருத்துவ கல்லூரியில் ரெய்டு:- இயக்குனர் தலைமறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கர்நாடகா மாணவருக்கு மருத்துவபடிப்புக்கான எம்.பி.பி.எஸ்., சீட் தர ரூ. 7.5 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி இயக்குனர் மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவானார்.கர்நாடகா மாநிலம் மல்லேஸ்வரத்தைச் சேரந்த மாணவர் ஒருவர் எம்.பி.பி.எஸ்.,மருத்துவ படிப்புக்காக திருவனந்தபுரம் காரகோணம் மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பித்தார். இதன் இயக்குனர் பென்னட் ஆப்ரஹாம் என்பவர் எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கிட ரூ. 7.5 கோடி கேட்டுள்ளார்.அதன்படி ரூ. 7.5 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ‛சீட் ஒதுக்காமல் இழுத்தடித்துள்ளார் இது குறித்து கர்நாடகா லஞ்ச ஒழிப்பு போலீசில் மாணவர் கொடுத்த புகாரின் பேரில், மல்லேஸ்வரம் போலீசார் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்குள் அதிரடியாக புகுந்து ரெய்டு நடத்தினர்.அப்போது இயக்குனர் பென்னட் ஆப்ரஹாம் இல்லை. தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.முன்னதாக பென்னட் ஆப்ரஹாம் பலரிடம் எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கிட லஞ்சமாக ரூ. 500 கோடி பணம் பெற்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ashok Madhavi
டிச 02, 2024 15:52

பணம் படைத்தவன் மதிப்பெண் குறைந்தாலும் பணம் கொடுத்து மருத்துவ சீட் பெற முடியும்.


Thangavel
நவ 28, 2024 04:25

கல்வியறிவு


saravanan gurusamy
நவ 27, 2024 19:11

நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கு மருத்துவக் கல்லூரி முதலைகளால் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான லஞ்சம் இப்படித்தான் பணக்கார முதலைகளிடம் இருந்து லஞ்சமாக பெறப்படுகிறது...நீட் இல்லையெனில் ஏழைகளின் மருத்துவக்கனவு நிறைவேற கோடி கோடியாய் கொடுக்க வேண்டும்..


Subash BV
நவ 27, 2024 18:51

Crooks cheating crooks. Investigate properly.


Ram pollachi
நவ 27, 2024 17:31

கேரள பதிவு கொண்ட கார்களில் டாக்டர் என்ற ஸ்டிக்கர் அதிகமாக காணலாம்... நூறு கோடி கொடுத்து இடம் வாங்க முடியும் இருநூறு கோடிக்கு மருத்துவமனை கட்ட பணம் இருக்கிறது... சீட்டுக்கு லஞ்சம் கொடுக்க முடியாதா குரு? மூன்று வயது குழந்தைக்கு ஒரு லட்சம் கொடுத்து ஸ்கூல் சீட்டு வாங்கும் போதே லஞ்ச ஒழிப்புத் துறையில் போட்டு கொடுத்திருந்தால் இப்போது இந்த நிலை வந்திருக்காது.


R.RAMACHANDRAN
நவ 27, 2024 07:01

7.5 கோடி லஞ்சம் கொடுத்தார் என்பது உண்மை எனில் அது கள்ள பணமா என்பதை ஆராய்வதோடு லஞ்சம் கொடுத்து மருத்துவ கல்லூரியில் சேர முயற்சித்த குற்றத்திற்கு தண்டனை பெற்றுத் தர வேண்டியதும் அவசியம்.அவரை மருத்துவ கல்லூரியில் சேர்த்துவிட்டிருந்தால் குற்றம் வெளிவந்திருக்காது என்பதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு செய்யவில்லை எனில் அது லஞ்சம் அளித்து மற்றவர்களின் உரிமைகளை கவர்ந்து கொள்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.


Kasimani Baskaran
நவ 27, 2024 06:17

500 கோடி என்பது பெருந்தொகை. அதை இவ்வளவு எளிதாக ஒரு கல்லூரி நிர்வாகம் சம்பாதிக்க முடியும் என்றால் இது ஒரு வகை பொருளாதார பயங்கரவாதம். தமிழகத்தில் இது போல பல கல்வித்தந்தைகள் உண்டு.


Indhuindian
நவ 27, 2024 05:10

கல்லூரி பெயரை கொஞ்சம் பாருங்க கண்டிப்பா மைனாரிட்டி கல்லூரின்னு அனுமதி வாங்கிகிட்டு கல்லா காட்டறாங்க ஆனா நாம என்ன பண்ணமுடியும். சிலுவை இருக்கற இடத்துலே சாத்தான்கள் போகாதே மனசிலாயோ


நிக்கோல்தாம்சன்
நவ 27, 2024 05:06

இந்த பட்டி செய்ததை வைத்து பார்க்கையில் நீட் தேர்வு வருமுன்னர் இவனை போன்றோர் என்ன ஆட்டம் ஆடியிருப்பர் ? அதுவும் தமிழக கல்வி தந்தைகளை நினைத்து பார்த்தேன் , எதற்கு தமிழகத்தில் நீட் இவ்வளவு வேகமாக எதிர்க்கப்படுகிறது என்பது புரிகிறது


அப்பாவி
நவ 27, 2024 04:58

நீட் எழுதி பாஸ் பண்ண முடியாதவனெல்லாம் இப்பிடி லஞ்சம் குடுத்து டாக்டராயிடுவான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை