உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்: ராஜ்நாத் சிங் உற்சாக தகவல்

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்: ராஜ்நாத் சிங் உற்சாக தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''கடந்த 2024 - 25ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1,50,590 கோடி ஆக அதிகரித்துள்ளது,'' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்து, உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே ஆயுதங்கள், தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், சமீபகாலமாக உள்நாட்டிலேயே ஆயுதங்கள், தளவாட தயாரிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு ராணுவ தளவாட உற்பத்தி அதிகரித்து வருகிறது.இது தொடர்பாக ராஜ்நாத் சிங், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:கடந்த 2024 - 25ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,50,590 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.27 லட்சம் கோடியை விட 18% வளர்ச்சி ஆகும். 2019-20ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை ரூ.79,071 கோடியாக இருந்ததிலிருந்து 90% அதிகரிப்பையும் குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இது குறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது: இது பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல் ஆகும். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகிறது. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஆக 09, 2025 16:43

இது போருக்கான நேரமில்லை..


vivek
ஆக 09, 2025 18:09

ஏல அப்பாவி வயிறு முட்ட ஓசி பிரியாணி சாப்பிட்டா இப்படி தான் உன் மூளைக்கு தோன்றும்


Swaminathan L
ஆக 09, 2025 15:56

பாதுகாப்பு தளவாட வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறையும். இன்னும் சில வருடங்களில் யுஏவி, ட்ரோன்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், குண்டுகள் வர்த்தகத்தில் இந்தியா நன்றாகக் காலூன்றும்.


SUBBU,MADURAI
ஆக 09, 2025 12:47

India is setting the stage for a game changing leap in defence with plans for a long range bomber capable of striking targets over 12,000 km without refuelling, equipped with BrahMos missiles. A bold stride in self-reliance and strategic depth. This is India redefining air power! Apart from state owned Munitions India, various Private Indian companies are coming forward to produce 154mm Artillery Shells. Kalyani Defence has capacity to produce 6,00,000 (6 lac) 155mm Artillery Shells of different kind annually. Reliance Defence is developing capacity to produce 2,00,000 (2 lac) 155mm Artillery Shells of different kind annually. Adani Defence is planning to produce 1,50,000 (1.5 lac) 155mm Artillery Shells of different kind annually.


ராமகிருஷ்ணன்
ஆக 09, 2025 12:23

பாகிஸ்தான் மற்றும் அண்டை நாட்டு பயங்கரவாதிகள், உள்நாட்டு, காங்கிரஸ் பயங்கரவாதிகளுக்கு மிக மோசமான செய்தி இது.


Thravisham
ஆக 10, 2025 02:26

இத்தாலிய கொட்டோரோச்சிய மாபியாவுக்கு பேரிடியான செய்தி இந்திய இத்தாலிய மாபியாவுக்கு அடி மேல இடியை இறக்கும் மத்திய அரசு


புதிய வீடியோ