உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது: தவெக மாநாட்டுக்கு புதுச்சேரி போலீசார் கட்டுப்பாடு

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது: தவெக மாநாட்டுக்கு புதுச்சேரி போலீசார் கட்டுப்பாடு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் விஜய் தலைமையில் நடக்கும் தவெக மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது. புதுச்சேரியில் வசிக்கும் 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை அம்மாநில போலீசார் விதித்துள்ளனர்.புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 'ரோடு ஷோ' நடத்த அனுமதி அளிக்கக்கோரி, அக்கட்சியினர் டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர். ஆனால், நீண்ட ஆலோசனைக்கு பின், கரூர் உயிரிழப்பு சம்பவம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், 'திறந்த வெளியில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கலாம்' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, வரும் 9ம் தேதி, விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்குமாறு, சீனியர் எஸ்.பி., கலைவாணனிடம் த.வெ.க.,வினர் மனு அளித்தனர். இந்நிலையில், இம்மாநாட்டிற்கு என தவெகவுக்கு புதுச்சேரி போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:* மாநாட்டில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும். தவெக கட்சி வழங்கும் கியூஆர் கோட் உடன் கூடிய நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்* இந்த அட்டை இல்லாதவர்கள், மாநாட்டு நடக்கும் இடத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். * இந்த அட்டை இல்லாதவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.* மாநாட்டில் பங்கேற்க குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை.* தவெக மாநாட்டில் பங்கேற்பதற்கு புதுச்சேரியில் வசிப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. இடையூறுகளை தவிர்க்க அவர்கள் மாநாட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.*வாகனங்களை நிறுத்துவதற்கு என புதுச்சேரியில் பாண்டி மெரினா பார்க்கிங், மைதான பின்புறம் மற்றும் பழைய துறைமுக பகுதி ஆகியவற்றில் வாகனங்களை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சாலையோரங்கள் அல்லது மாநாட்டின் உள்ளே வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.* மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி சிகிச்சை, தீயணைப்பு வாகனங்கள்,அவசர காலங்களில் வெளியேறும் வழி ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் புதுச்சேரி போலீசார் கூறியுள்ளார்.விஜய் கூட்டத்துக்கான இடத்தை தர போலீஸ் மறுப்பு?தமிழக வெற்றி கழகம் சார்பில் வரும், 16ம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்படுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஒன்றான பவளத்தாம்பாளையம் தனியார் பள்ளி மைதானத்தில் (ஸ்ரீவாரி மண்டபம் அருகில்) அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பு செயலர் செங்கோட்டையன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:விஜய் பொதுக்கூட்டம் நடத்த, விஜயமங்கலம் டோல்கேட் அருகில் உள்ள, 16 ஏக்கர் நிலத்தை கேட்டுள்ளோம். இதில்லாமல் வாகனங்கள் நிறுத்த, பத்து ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம். இதேபோல் பவளத்தாம்பாளையத்தில் ஏழு ஏக்கர் இடத்தையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தோம். இதில்லாமல் ஒரு மாற்றிடமும் தேர்வு செய்து கடிதம் வழங்கவுள்ளோம். பவளத்தாம்பாளையம் இடத்தை ஒதுக்க போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தி வந்தது. இதுகுறித்து போலீசிடம் கேட்டபோது, அப்படி எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை எனக் கூறிவிட்டனர். பொதுக்கூட்டத்துக்கு, 12:௦௦ மணி முதல் மாலை, 6:௦௦ மணி வரை அனுமதி கேட்டுள்ளோம். கூட்டத்தின் கட்டுப்பாடு குறித்து போலீஸ் தரப்பில் எங்களிடம் எதுவும் கூறவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
டிச 08, 2025 10:21

புதுவை மக்களுக்கு அனுமதி மறுத்து தமிழக ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி தரலாம். ஏனெனில் கட்சியின் பெயரிலேயே புதுச்சேரி இல்லை. தமிழகம் மட்டுமே உள்ளது.


angbu ganesh
டிச 08, 2025 09:26

அப்போ விஜய் தமிழகத்தை சேர்ந்தவர் இல்லையா அவர ஏன் உள்ள விடறீங்க


Indhuindian
டிச 08, 2025 09:19

அடுத்த அதிரடி நடவடிக்கை எதிர் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு/ போராட்டங்களுக்கு வெளியூர்லேந்து யாரும் வரக்கூடாது. அந்த வூர் என்ட்ரி பாயிண்ட்ல பெரிகாட் வெச்சு ஆதார் கார்டை சரி பார்த்து உள்ளே விடப்படும். முதல்நாளே வெளியூர்லேந்து வந்தவங்க தாற்காலிகமாவது அந்த வூர் எல்லைக்கு அப்பால போயிடனும். அப்பதான் சட்டம் ஒஷுங்கை சரியா வெச்சிக்க முடியும்


பாலாஜி
டிச 08, 2025 08:56

தவெககாரன்கள் தமிழ்நாட்டினர் இல்லையா?


Sun
டிச 08, 2025 08:34

சரியான நடவடிக்கைதான். இல்லன்னா அணில் குஞ்சுகள் இங்கே இருந்து கிளம்பிப் போய் புதுச்சேரி போலீசையும் கடித்து வைக்கும்.


vbs manian
டிச 08, 2025 08:23

ஒரு ஜனநாயக நாட்டில் இதனை கட்டுப்பாடுகளா. பூத கண்ணாடி கொண்டு இவரை அலசுகிறார். ஆளும் கட்சி கூட்டங்களுக்கு இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிப்பார்களா. மாற்றான்தாய் மனப்பான்மை கொடி கட்டி பறக்கிறது. வேகமாக முதல்அமைச்சர் நாற்காலிக்கு அருகில் அழைத்து செல்கின்றனர்.


முருகன்
டிச 08, 2025 07:39

புதுச்சேரியில் நடந்தால் கட்டுப்பாடு தமிழகத்தில் நடந்தால் கெடுபிடி


GMM
டிச 08, 2025 07:09

போலீஸ் பார்வையில் தமிழகம், புதுச்சேரி சேர்ந்தவர் என்ற பார்வை கூடாது. தவறான முன் உதாரணம். இனி புதுச்சேரிக்கு யூனியன் அந்தஸ்து தேவையில்லை. மேலும் அண்ணா அறிமுகம் ஆக MGR உதவினார். தவறான தீர்வு மூலம் விஜய்க்கு ரசிகர் ஆதரவை மக்கள் ஆதரவாக மாற்றி வருகிறார்கள்.


Indhuindian
டிச 08, 2025 05:24

பாண்டிச்சேரி போகணும்ன்னா விசா வாங்கணுமா? பாண்டிச்சேரி இன்னும் இந்தியாவில்தானே இருக்கு?


சமீபத்திய செய்தி