மேலும் செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணா் கோவில் ஏகாதசி உற்சவம் கோலாகலம்
11 hour(s) ago
பார்லி.,க்கு நாய் குட்டியுடன் வந்த காங்., - எம்.பி., ரேணுகா
11 hour(s) ago | 9
பார்லி.,யில் நேற்று...
11 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் டிச.5ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்று டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் டிச.5ம் தேதி ரோடு ஷோ ஒன்றை நடத்த தவெக தலைவர் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையில் ரோடு ஷோ நடத்தவும், சோனாம் பாளையம் தண்ணீர் தொட்டி அருகே மைக்கில் பேசவும் 3 நாட்கள் முன்பு புதுச்சேரி டிஜஜி அலுவலகத்தில் தவெகவினர் மனு அளித்தனர்.முதல்வர் ரங்கசாமியை சந்தித்தும் அனுமதி தருமாறு அவர்கள் கேட்டு இருந்தனர்.அனுமதி கோரி, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் 4 முறை கடிதம் அளித்து இருந்தனர். இந் நிலையில், புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என்று டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்துள்ளார். திறந்த இடத்தில் தவெக பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று அவர் கூறி உள்ளார்.
11 hour(s) ago
11 hour(s) ago | 9
11 hour(s) ago