உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான்: நயினார் நாகேந்திரன் பேட்டி

திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான்: நயினார் நாகேந்திரன் பேட்டி

தஞ்சாவூர்: திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான் உள்ளன என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் 1040வது சதயவிழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு பா.ஜ. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது : நாட்டில் எத்தனையோ மன்னர்கள் ஆண்டனர். அதில், அனைவரையும் மிஞ்சியவர் மாமன்னர் ராஜராஜசோழன். திறமையான ஆட்சி நடத்தினார். நமது பிரதமர் மோடி கங்கை கொண்டசோழபுரத்தில் ராஜேந்திரசோழனின் 1000 வது ஆண்டு விழாவில் பங்கேற்று ராஜேந்திரசோழனின் புகழை உலகெங்கிலும் பரப்பினார். தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை உள்ளே வைப்பது குறித்து பல தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து அதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு பரிசீலனை செய்வோம். நெல் கொள்முதல் தாமதத்தால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும், முளைத்து வீணாகி வருகிறது. நெல் மூட்டைகளுடன் லாரிகள் பல நாட்கள் காத்திருக்கின்றன. விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இது எதையும் பற்றி கவலைப்படாமல் முதல்வர், துணை முதல்வர் சினிமா பார்த்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டனர். இதுவரை சொன்னதை எதையும் தி.மு.க அரசு செய்யவில்லை. திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான் உள்ளன. கவுண்டவுன் தொடங்கி விட்டது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sundar R
நவ 01, 2025 20:59

மோடி ஆட்சி தமிழகத்திற்கு வர வேண்டும். திமுக முடியாட்சியை தமிழக வட எல்லையான சூலூர் பேட்டைக்கு அப்பால் விரட்டியடிக்க வேண்டும்.


T.sthivinayagam
நவ 01, 2025 21:43

மோடி ஆட்சி தமிழகத்தில் வருவது பெருமை, அதே நேரத்தில் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் சிறந்த தமிழர் குஜராத்தை ஆள்வதே தேசத்திற்கு பெருமை


Anbuselvan
நவ 01, 2025 19:16

திரு அண்ணாமலை சொல்வதை போல குடியரசு ஆட்சி வரவும் வாய்ப்பு உள்ளதே. அப்படி வந்தால் நான்கைந்து மாதத்திற்குள் மத்திய அரசு மக்களுக்கு பல நன்மைகளை செய்யலாமே


என்றும் இந்தியன்
நவ 01, 2025 18:48

திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான்: நயினார். அப்போ தினம் ஒரு ரூ 100 கோடி ஊழல் நடக்கும் 140 நாட்கள் x 100 கோடி தினம் = ரூ 14,000 கோடி ஊழல் சர்வ சாதாரணமாக நடக்கும்


திகழ்ஓவியன்
நவ 01, 2025 18:42

நல்லவேளை இன்னும் 6 அம்மாவாசை இருக்கு என்று சொல்லவில்லை


chandran
நவ 01, 2025 18:11

உங்கள் கனவு நனவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Balasubramanian
நவ 01, 2025 17:58

துட்டு க்கு ஓட்டு போடுபவர்கள் இருக்கும் வரை கவலை இல்லை


Rahim
நவ 01, 2025 17:28

140 நாட்களுக்கு பிறகும் மீண்டும் திமுக ஆட்சி


Kulandai kannan
நவ 01, 2025 16:59

திமுக வீட்டுக்கு போவது உறுதி. R.K. Nagar இடைத் தேர்தல் முடிவுதான் நடக்கும்


T.sthivinayagam
நவ 01, 2025 18:19

திமுக்காவை வீட்டு அனுப்பி விட்டு அப்புறம் யார்....... யார்....


Senthoora
நவ 01, 2025 16:55

முதலிலுங்க கூட்டணியை ஒரு முடிவுக்கு வாங்க, மக்களுக்கு என்ன பண்ணபோறீங்க அதை சொல்லுங்க, சும்மா திமுகவை ஒழிப்போம் என்று சொல்லியே காலத்தையும் கட்ச்சியையும் அமித்ஷாவின் பணத்தையும் சுருட்டுறீங்களே, அண்ணாமலை இதுவரை காலமும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் உழைத்தவர் அவரை ஓரங்கட்ட பாக்கிறிங்க, தேர்தல் வரும்போது திமுக பக்கம் அண்ணாமலை சாய்ந்தாலும் வியப்பில்லை


P. SRINIVASAN
நவ 01, 2025 16:28

பகல் கனவு.. நல்ல நகைச்சுவை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை