உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 வந்தே பாரத் ரயில், மெட்ரோ ரயில் சேவையை பெங்களூருவில் துவக்கி வைத்தார் பிரதமர்

3 வந்தே பாரத் ரயில், மெட்ரோ ரயில் சேவையை பெங்களூருவில் துவக்கி வைத்தார் பிரதமர்

பெங்களூரு: பெங்களூரின் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரயில் சேவையையும், பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.கர்நாடகாவின் பெங்களூருவில் ராஷ்ட்ரீய வித்யாலயா சாலை எனும் ஆர்.வி.ரோடு முதல் தமிழகத்தின் ஓசூர் சாலையில் உள்ள பொம்மசந்திரா வரை மெட்ரோ பாதை அமைக்கும் பணிக்கு, 2016 ஜூன் 16ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.மொத்தம் 18.82 கி.மீ., துாரத்திற்கு அமையும் இந்த வழித்தடத்திற்காக 5,056 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. பல முறை இலக்கு நிர்ணயித்தும் எதுவும் நினைத்தபடி முடியாமல் போனது. இதனால் திட்ட செலவு 7,160 கோடி ரூபாயை கடந்தது.இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவையை, இன்று காலை 11:45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.அதற்கு முன், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பெங்களூரு - பெலகாவி; அமிர்தசரஸ் - ஸ்ரீமாதா வைஷ்ணோதேவி கத்ரி; அஜ்னி - புனே ஆகிய வழித்தடங்களில்,3 'வந்தே பாரத்' ரயில் சேவைகளையும் பிரதமர் துவக்கி வைத்தார். பிரதமர் துவக்கி வைத்த வந்தே பாரத் ரயிலானது, நாட்டின் 150வது வந்தே பாரத் ரயிலாகும். பின், ராகிகுட்டாவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை, மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.ஐ.டி., ஆடிட்டோரியத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கெம்பாபுரா - ஜே.பி.நகர் 4வது பேஸ்; ஹொசஹள்ளி - கடபகெரே இடையிலான மெட்ரோ ரயில் பாதை பணிகளை துவக்கி வைத்தார். 44.65 கி.மீ., துார, இந்த வழித்தடம் 15,610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா ரயில் சேவை இன்று துவங்குவதன் மூலம், பெங்களூரு மக்களின் ஒன்பது ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.இதனால் மெட்ரோ தினசரி பயணியரின் எண்ணிக்கை 25 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் பங்கேற்க பெங்களூரு வந்த பிரதமர் மோடியை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

vivek
ஆக 11, 2025 06:03

ananthu...you are 79...do you any have maturity before commenting our honourable prime minister...


Anantharaman Srinivasan
ஆக 10, 2025 22:43

Vivek. Yes i am 79 yrs.sitting idle today. For ur information I am X ஜனசங்கம் member. . வாஜ்பாய் அத்வானி காலத்து பிஜேபி இன்று கிடையாது.


K.n. Dhasarathan
ஆக 10, 2025 21:16

தமிழகத்திற்கு ரயில் திட்டங்களுக்கு பட்டை நாமம் சும்மா பேருக்கு பிரதமர் தமிழ்நாட்டில் சில வழி தடங்களில் நீட்டிப்பு மட்டுமே பண்ணப்பட்டது, புதிய திட்டங்கள் 0, புதிய ரயில்கள் எங்கே ? ரயில்வே பட்ஜெட் டில் நிதி ஒதுக்கீடு வெறும் 1000 ரூபாய், அது எதற்கு ? நாக்கு வழிக்கவா? இதற்க்கு நிதி அமைச்சர் ஜால்றா தட்டிக்கொண்டு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்து கொண்டு, தங்கள் பதவியை காத்துக் கொண்டு, அடிமையாக கிடக்கிறார். அதுவும் வந்டே பாராட் ரயில்கள் எதற்கு ? சாதாரண மக்கள் போகும் விரைவு / பஸ்சேன்ஜ்ர் ரயில்கள் ஏன் விடவில்லை ?


ஆரூர் ரங்
ஆக 10, 2025 20:02

அங்கும் அப்பலோ இருக்கு .ஆனால் அந்த முதல்வர் ஒளிந்து கொள்ளவில்லை.


Kasimani Baskaran
ஆக 10, 2025 18:29

நாட்டின் ஐடி தலைநகரில் போதுமான போக்குவரத்து வசதியில்லாமல் சீரழிவதை சரி செய்ய எடுக்கப்பட்ட பாராட்டப்படவேண்டிய முயற்ச்சி.


vbs manian
ஆக 10, 2025 15:32

பெங்களுருவில் சித்து சிவகுமார் பிரதமர் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். கேரளாவில் விஜயன் கலந்து கொள்கிறார். இதுவன்றோ அரசியல் நாகரிகம்.


Anantharaman Srinivasan
ஆக 10, 2025 15:10

மெட்ரோ ரயில் சேவையை நேரடியாக பெங்களூருவில் துவக்கி வைக்கும் அளவுக்கு பிரதமர்க்கு free time இருக்கு.


vivek
ஆக 10, 2025 16:28

ananthraman,,sitting idle at home gives u such brainless idea


SUBBU,MADURAI
ஆக 10, 2025 19:36

அனந்தராமா அறிவாலயத்துல இன்னும் அதே அலுமினிய தட்டுதானா


S.VENKATESAN
ஆக 10, 2025 20:29

பர்னால் தடவுங்கள்


Anantharaman Srinivasan
ஆக 10, 2025 22:34

SUBBU,MADURAI.. அறிவாலயம் அடித்திருக்கும் கொள்ளைக்கு Bathroom க்கு கூட தங்ககுவளை வைக்கமுடியும்.


முதல் தமிழன்
ஆக 10, 2025 14:07

நம்ம பிரதமர் ஒரு நாள் ஒரே ஒரு நாள் லீவு போடட்டும், அப்புறம் தெரியும் மக்களுக்கு அவர் அருமை. ஒன்னும் இயங்காது... அவ்ளோதான் நம்ம வாழ்க்கை. ஏதோ அவர் பெரிய மனது செய்து எல்லாத்தையும் திறக்கிறது, கொடி அசைத்து ரயில் ஓடுறதுன்னு நம்ம வாழ்க்கை நல்ல படியா போகுது. நம்ம பாக்கியம்...


Perumal Pillai
ஆக 10, 2025 13:41

சிறுமையான கட்சியில் பெருந்தன்மை மிக்க ஒரு முதலமைச்சர் சித்தராமையா. அவர் பிறந்தது ஒரு குடும்ப பாரம்பரியம் மிக்க கண்ணியமான வீடாக இருக்கும் .


SUBBU,MADURAI
ஆக 10, 2025 15:14

என்னாது சித்தராமையா பாரம்பரியம் மிக்கவரா?


நிக்கோல்தாம்சன்
ஆக 10, 2025 15:39

சித்தராமையாவை புகழ்ந்து பேசும் நீங்க அவருக்கு கழுவி விட்டவாறே ? கருநாடகவில் வசித்த்து பாருங்க,


V RAMASWAMY
ஆக 10, 2025 17:45

சிறுமையான அழிந்துகொண்டிருக்கும் கட்சியிலிருக்கும் சிறுமையானவர்.


Ramesh Sargam
ஆக 10, 2025 12:32

பிரதமருக்கு நன்றி. பிரதமருக்கு ஒரு விண்ணப்பம். அது என்னவென்றால் பெங்களூரு Silkboard via K R Puram, Hebbal - to Bengaluru விமானநிலைய மெட்ரோ பணிகளை விரைவில் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட மெட்ரோ அதிகாரிகளுக்கு கேட்டுக்கொள்ளவும். நன்றி.


Gokul Krishnan
ஆக 10, 2025 15:13

மாண்புமிகு பிரதமர் அவர்களை பொறுத்தவரை மேக வெடிப்பு திடீர் அதி கனமழையால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் தூரம் வெகு தொலைவில் உள்ளது பெங்களூரு தான் டெல்லிக்கு மிக அருகில் உள்ளது


vivek
ஆக 10, 2025 18:08

ரெண்டுக்கும் என்ன சம்பந்தம் அறிவாளி


theruvasagan
ஆக 10, 2025 22:17

வேங்கைவாசல் அன்டார்டிக்காவுக்கு அப்பால இருக்கறதால தானே உங்களால போகமுடியல. அது மாதிரிதான்.


முக்கிய வீடியோ