உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை, விமானப்படை மும்முரம்

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை, விமானப்படை மும்முரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் வாங்க இந்திய விமானப்படையும், கடற்படையும் தீவிரம் காட்டி வருகின்றன.இந்தியா ரஷ்யா கூட்டு தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டு உள்ளது. நான்கு நாட்கள் நடந்த 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, கடைசி நாளில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீது பிரம்மோஸ் ஏவுகணை மூலம் இந்தியா துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் பலத்த சேதம் ஏற்படவே, தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகளின் திறன் குறித்து பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்து இருந்தார்.இதனையடுத்து இந்த ஏவுகணைக்கான மவுசு அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளின் ஏவுகணைகளை காட்டிலும் பிரம்மோஸ் ஏவுகணையின் விலை குறைவு என்பதால், இதனை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.இந்நிலையில், இந்த ஏவுகணைகளை அதிகளவில் வாங்க இந்திய விமானப்படையும், கடற்படையும் மும்முரம் காட்டி வருகின்றன. விரைவில், மத்திய பாதுகாப்பு அமைச்சரவையின் உயர்மட்டக்குழு விரைவில் கூடி, இதற்கு ஒப்புதல் வழங்க திட்டமிட்டுள்ளது.கடற்படையில் பயன்படுத்தப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளையும் மற்றும் விமானப்படைக்கு வான் மற்றும் தரையில் இருந்து தாக்க பயன்படுத்தப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. பிரம்மோஸ் ஏவுகணைகளை, போர்க்கப்பல்களில் வைத்து பயன்படுத்த இந்திய கடற்படையும், ரஷ்யா தயாரிப்பான சு-30 எம்கேஐ போர் விமானங்களில் வைத்து பயன்படுத்த இந்திய விமானப்படையும் திட்டமிட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy Sekar
ஆக 05, 2025 20:38

நமது ராணுவத்தின் வலிமையை மோடிஜி இந்த அளவுக்கு உயர்த்திக்காட்டியது ஆச்சர்யப்பட வைக்கின்றது. மனுஷன் எப்படியெல்லாம் திட்டமிட்டு எந்தெந்த ஆயுதங்கள் எப்படிப்பட்டவை அதன் திறனையெல்லாம் ஆராய்ந்து நமது ராணுவத்தில் சேர்த்தது பிரமிப்பாக இருக்கிறது. வல்லரசு என்று மார்தட்டிய நாடுகளை மிரளவைத்துவிட்டார் ஆப்பரேஷன் சிந்தூர் மூலம். மென்மேலும் பலம்வாய்ந்த ராணுவ வலிமை மிக்க நாடாக மாற்றிவிட்டார் மோடிஜி. இனி யாருக்கும் எதற்கும் அடிபணியும் சூழலே இருக்காது. அமேரிக்கா போன்ற திமிர்பிடித்த நாடுகளெல்லாம் இந்த கோபத்தைத்தான் கடுப்போடு விமர்சிக்கின்றது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை